twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் ரேஸில் இணைந்த காந்தாரா...விருதை அள்ளுமா?..எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

    |

    சென்னை : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் கடைசி நேரத்தில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் நிச்சயம் விருதை அள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

    படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது.

    அழிவில்லா கடவுள்..அவதார் தி வே ஆப் வாட்டர்..காந்தாரா ஓரம்போ.. மதுரையை கலக்கும் போஸ்டர்!அழிவில்லா கடவுள்..அவதார் தி வே ஆப் வாட்டர்..காந்தாரா ஓரம்போ.. மதுரையை கலக்கும் போஸ்டர்!

    காந்தாரா கதை

    காந்தாரா கதை

    பெயர், புகழ், செல்வாக்கும் கொண்ட ஒரு அரசருக்கு எதிலும் மன நிம்மதி இல்லாததால், முனிவர் ஒருவரின் ஆலோசனையை கேட்டு, நிம்மதி தேடி அலைகிறார். அப்போது, காட்டுப்பகுதியில் ஒரு இனத்தவர் வழிபாடு செய்யும் தெய்வத்தைப்பார்த்து, மெய்மறந்து அந்த தெய்வத்தை தனக்கு தரும்படி கேட்கிறார். அதற்கு பதிலாக அந்த தெய்வன், என் குரலின் சத்தம் எவ்வளவு தூரம் கேட்கிறோ அவ்வளவு நிலத்தையும் எங்கள் மக்களுக்கு தரவேண்டும் என கேட்கிறது.

    நேரில் வந்த தெய்வம்

    நேரில் வந்த தெய்வம்

    தெய்வத்திற்காக பல ஏக்கர் நிலத்தை அந்த மக்களுக்கு எழுதி கொடுத்துவிடுகிறார். இதற்குப் பிறகு அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்க, அங்கிருந்த தெய்வம் அவனை கொன்றுவிடுகிறது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதே நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க நினைக்க அரசர் வழிவந்த ஒருவன் நினைக்க தெய்வம் மீண்டும் தோன்றி நிலத்தை காப்பாற்றுகிறது.

    மகத்தான மசூல்

    மகத்தான மசூல்

    திரையரங்கிற்கு அதிக ரசிகர்களை வரவைத்த திரைப்படம் என்ற பெருமை காந்தாரா படத்திற்கு கிடைத்தது. கர்நாடக மாநிலம் மங்களுர், உடுப்பி போன்ற தெற்கு கடலோரப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் வழிபடக்கூடிய கிராம தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதால், அப்படம் அனைவருக்கும் பிடித்துப்போய் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ஆஸ்கர் விருதுக்கு

    ஆஸ்கர் விருதுக்கு

    இந்நிலையில்,காந்தாரா படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான விருது பரிந்துரைக்கு திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது என்று படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தாலும் காந்தாரா நிச்சயம் விருதை வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஆர்.ஆர்.ஆர். நாட்டுக்கூத்து

    ஆர்.ஆர்.ஆர். நாட்டுக்கூத்து

    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் குஜராத்தி படமான செல்லோ ஷோவும் தேர்வாகி உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 12ந் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது.

    English summary
    Rishab Shetty's Kantara movie has been confirmed that the film has been sent for the Oscars nomination
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X