ஓடிடியில் வெளியானது காந்தாரா.. நள்ளிரவில் இருந்தே பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள்.. கடைசியில் அப்செட்!

சென்னை: நவம்பர் 4ம் தேதியே பொன்னியின் செல்வன் படத்துடன் கன்னட திரைப்படமான காந்தாரா ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அமேசான் ப்ரைம் அதன் ஓடிடி ரிலீஸை தள்ளி வைத்தது.

அதன் பின்னர் எப்போதான் காந்தாரா ஓடிடியில் வரும் வீட்டில் குடும்பத்தினருடன் காணலாம் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக நள்ளிரவு 12 மணி முதல் காந்தாரா அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு இந்த ஆண்டு கன்னட திரையுலகையே தலைநிமிரச் செய்த படம் என்றால் அது காந்தாரா தான்.

மைல் கல்

மைல் கல்

கன்னட திரையுலகம் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அதை பற்றி யாருமே பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. கன்னட ரசிகர்களை தவிர பிற மொழி ரசிகர்கள் கன்னட படங்களை பார்ப்பதை வெகுவாக தவிர்த்து வந்தனர். ஆனால், கேஜிஎஃப் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பார்வையும் கன்னட திரையுலகம் மீது திரும்பியுள்ளது. அதில், மைல் கல்லாக காந்தாரா திரைப்படம் அமைந்துள்ளது.

400 கோடி வசூல்

400 கோடி வசூல்

வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி என்கிற ரியல் இமாலய வசூல் வேட்டையை நடத்தி கன்னட திரையுலகத்திற்கு மிகப்பெரிய படமாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன் வன அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரேக் போட்ட பொன்னியின் செல்வன்

பிரேக் போட்ட பொன்னியின் செல்வன்

வசூலில் பொன்னியின் செல்வன் படத்தை துரத்திக் கொண்டு வரும் காந்தாரா திரைப்படம் ஓடிடியிலும் அந்த படத்திற்கு பெரிய தலைவலியாக மாறும் என நவம்பர் 4ம் தேதி கருதப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை முதலில் ரசிகர்கள் பார்த்து முடிக்கட்டும் அதன் பிறகு காந்தாராவை இறக்குவோம் என அமேசான் ப்ரைம் இவ்வளவு கால தாமதம் செய்து விட்டது.

ஓடிடியில் வெளியானது

ஓடிடியில் வெளியானது

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24ம் தேதி காந்தாரா வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடியில் காந்தாரா திரைப்படம் வெளியானது. அந்த படத்தை குடும்பத்துடன் விடிய விடிய பார்த்து ரசித்த மக்கள் #KantaraOnPrime ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

4 மொழிகளில்

4 மொழிகளில்

கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் பிரைமில் காந்தாரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த ஓடிடி ரசிகர்கள் படம் படு மிரட்டலாக உள்ளதாக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தியேட்டரில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை காந்தாரா அனுபவத்தை ஓடிடியில் கண்டு ரசித்தனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

காந்தாரா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வராஹ ரூபம் பாடல் காப்பி ரைட்ஸ் பிரச்சனை காரணமாக மாற்றப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்துக்கு பலமே அந்த பாடல் தான் அதையே தூக்கிட்டீங்களே.. ரொம்பவே கடுப்பா இருக்கு என சோஷியல் மீடியாவில் தங்கள் வருத்தத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபீலிங்கே இல்லை

ஃபீலிங்கே இல்லை

தியேட்டரில் இருந்த அந்த கூஸ்பம்ப்ஸ் காந்தாரா ஓடிடியில் வெளியானதில் கொஞ்சம் கூட இல்லை. கிளைமேக்ஸில் வராஹ ரூபம் பாடல் மாற்றப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X