»   »  படமாகிறது 'ஹரியானா புயல்' கபில்தேவ் வாழ்க்கை... யார் நடிக்கிறார் தெரியுமா!

படமாகிறது 'ஹரியானா புயல்' கபில்தேவ் வாழ்க்கை... யார் நடிக்கிறார் தெரியுமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் வரிசையில் தோனி, மேரிகோம், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரையடுத்து தற்போது கபில்தேவ் இணைந்துள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, WWE வீரர் கிரேட் காளி ஆகியோரது வாழ்க்கையும் படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கபில்தேவ். இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர். இவர் தலைமையில்தான் முதன்முறையாக இந்தியா 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அதனால், இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கபில்தேவின் வாழ்க்கை படமாக இருக்கிறது.

Kapil dev's life story became a film

இயக்குனர் கபீர்கான் கபில்தேவ் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளாராம். அதற்கு அவர் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கடைசியாக பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை பேன்தோம் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

கபில்தேவ் தலைமையில் 1983-ல் உலகக் கோப்பை வென்றபிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் வெகுவாக அதிகரித்தது. கபில் தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Director Kabir Khan will be making a film on Kapil Dev's life story. Ranveer Singh, the growing actor in Bollywood, will play as Kapil Dev.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil