»   »  ஸ்ரீதேவி வீட்டில் பிரச்சனை பெரிதாகிவிட்டதா?: பர்த்டே பார்ட்டிக்கு வராத அந்த 2 பேர்

ஸ்ரீதேவி வீட்டில் பிரச்சனை பெரிதாகிவிட்டதா?: பர்த்டே பார்ட்டிக்கு வராத அந்த 2 பேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவியின் கணவருக்கும் அவரின் சகோதரர்களுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரின் 63வது பிறந்தநாளுக்கு மும்பையில் இல்லாமல் சென்னையில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

பாலிவுட் பிரபலங்கள் சிலர் மும்பையில் இருந்து சென்னை வந்து பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

சகோதரர்கள்

சகோதரர்கள்

பார்ட்டியில் போனி கபூரின் சகோதரர்களான சஞ்சய் கபூர், அனில் கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் குடும்பத்தில் இருந்து யாருமே வரவில்லை.

மோசம்

மோசம்

போனி கபூருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருப்பதாக குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரணம்

மரணம்

போனி கபூரின் முதல் மனைவி மோனா இறந்த பிறகு அவருக்கும் அவரின் சகோதரர்களுக்கும் இடையே பிரச்சனை மேலும் பெரிதாகியுள்ளது. போனி தனது சகோதரர்களை பார்க்க செல்வது இல்லை. அவர்களும் அப்படித் தான் என்கிறார் குடும்ப நண்பர்.

குடும்பம்

குடும்பம்

குடும்ப நிகழ்ச்சிகளில் கூட சகோதரர்கள் ஒன்று சேர்வது இல்லை. மோனாவின் பிள்ளைகளான நடிகர் அர்ஜுன் கபூரும், அன்சுலாவும் அனில், சஞ்சய் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளனர். ஆனால் அப்பா போனி கபூர் குடும்பத்தை பார்த்தாலே ஒதுங்கிவிடுகின்றனர்.

English summary
The rift between Boney Kapoor and his brothers Anil and Sanjay has deepened. Kapoor brothers ditched Boney Kapoor's birthday bash in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil