Just In
- 1 min ago
சேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்!
- 17 min ago
தொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு!
- 18 min ago
சிரிப்ப ஃபேக்குன்னு சொல்லிட்டாங்க.. டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணாங்க.. கமலிடம் புலம்பிய ஹவுஸ்மேட்ஸ்!
- 42 min ago
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.. அமீரின் 'நாற்காலி'யில் எம்ஜிஆர் புகழ்பாடும் பாடல்.. முதல்வர் வெளியிட்டார்
Don't Miss!
- Sports
சத்தமே இல்லை.. வாயை கூட திறக்காத ஆஸி. கேப்டன்.. மொத்தமாக அடங்கிய வீரர்கள்.. இது தேவையா?
- News
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 18ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கணவரை பிரிந்த சீனியர் நடிகை இளம் ஹீரோவை காதலிப்பதை உளறிய இயக்குனர்
மும்பை: நடிகை மலாய்கா அரோராவும், நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிப்பதை இயக்குனர் கரண் ஜோஹார் உறுதி செய்துள்ளார்.
சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பிறகு நடிகை மலாய்கா அரோரா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அவரும், அவரை விட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக உள்ளது.
இந்த காதல் அர்ஜுன் கபூரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

அர்ஜுன்
மலாய்காவும், அர்ஜுனும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள், பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தெரிந்தும் அனைவரும் கிசுகிசுக்கிறார்களே தவிர அதை யாரும் வெளியே சொல்லவில்லை. காதல் விஷயத்தில் அர்ஜுன் தனது அப்பாவின் பேச்சை கேட்க தயாராக இல்லையாம்.

கரண்
அண்மையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் வெளிநாட்டிற்கு சென்று வந்தார். டிவி நிகழ்ச்சியில் என்ன மலாய்கா வெளிநாட்டு போனீங்க போல, தனியாக போன மாதிரி தெரியலையே என்று கூறி அவரை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கலாய்த்தார். மலாய்காவும் சிரித்து மழுப்பினார். கரண் கலாய்த்தபோது மனிதருக்கு தில்லு தான் என்றார்கள் ரசிகர்கள்.

காபி வித் கரண்
காபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்து கொண்டு கரண் ஜோஹார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்கள். ராகுலிடம் உங்களுக்கு யார் மீது அதிகம் ஈர்ப்பு இருந்தது என்று கேட்டதற்கு மலாய்கா அரோரா என்று பதில் அளித்தார் ராகுல்.

உறுதி
மலாய்கா மீது தற்போது ஈர்ப்பு இல்லை என்று ராகுல் கூறினார். இதை கேட்ட கரணோ, ஏன் மலாய்கா அர்ஜுனை காதலிப்பதால் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டதா என்று ராகுலிடம் கேட்டார். இதன் மூலம் மலாய்கா, அர்ஜுன் காதலிப்பதை கரண் உறுதி செய்துள்ளார். முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் ஒருவரை காதலிப்பதாக கூறிய அர்ஜுன் கபூர் அவரின் பெயரை தெரிவிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.