»   »  நான் 'அவனே' தான், ஆனால் அந்த 3 எழுத்து வார்த்தையை கூற மாட்டேன்: பிரபல இயக்குனர்

நான் 'அவனே' தான், ஆனால் அந்த 3 எழுத்து வார்த்தையை கூற மாட்டேன்: பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை முதன்முதலாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பாலிவுட்டில் பல காதல் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளவர் இயக்குனர் கரண் ஜோஹார். நடிகர் ஷாருக்கானின் நெருங்கிய நண்பர். கரண் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பாலிவுட்டில் பல காலமாக பேசிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து கரண் தன்னை பற்றிய புத்தகமான தி அன்சூட்டபிள் பாய்-ல் கூறியிருப்பதாவது,

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

நான் செக்ஸ் விஷயத்தில் எந்த வகையை சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நான் சப்தம் போட்டு சொல்லத் தேவையில்லை. அப்படி சொன்னால் சிறைக்கு செல்ல வேண்டிய நாட்டில் வசிக்கிறேன். அதனால் தான் அந்த மூன்று எழுத்து வார்த்தையை நான் கூற மாட்டேன்.

நியூயார்க்

நியூயார்க்

எனக்கு 26 வயது இருக்கும்போது கன்னித்தன்மையை இழந்தேன். அது நியூயார்க் நகரில் நடந்தது. அது வரை செக்ஸ் விஷயத்தில் நான் எந்த வகையை சேர்ந்தவன் என்பது எனக்கு தெரியாது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நான் ஷாருக்கானுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள். யாராவது உடன் பிறந்த சகோதரருடன் போய் செக்ஸ் வைத்துக் கொள்வார்களா? ஷாருக்கான் என் சகோதரர் போன்றவர்.

வழக்கு

வழக்கு

நான் செக்ஸில் எந்த வகையை சேர்ந்தவன் என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. போலீஸ் வழக்குகளை சந்திக்க நான் விரும்பவில்லை.

English summary
Bollywood director Karan Johar has accepted his sexuality for the first time in his biography titled 'The unsuitable boy'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil