»   »  வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான 'அந்த' பிரபல இயக்குனர்

வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான 'அந்த' பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஓரினச்சேர்க்கையாளரான பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பல காலம் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அண்மையில் அவர் ஒப்புக் கொண்டார்.

Karan Johar becomes father of twins

அதை ஒப்புக் கொள்வதில் தான் வெட்கப்படவில்லை என்றும் தெரிவித்தார் கரண். இந்நிலையில் வாடகை தாய் மூலம் ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார் கரண்.

பெண் குழந்தைக்கு ரூஹி ஜோஹார் என்றும், ஆண் குழந்தைக்கு யஷ் ஜோஹார் என்றும் பெயர் வைத்துள்ளார் கரண். யஷ் என்பது கரணின் தந்தையின் பெயர் ஆகும். தன் தாய் ஹிரூவின் பெயரை உல்டாவாக்கி ரூஹி என்று மகளுக்கு பெயர் வைத்துள்ளார்.

Karan Johar becomes father of twins

குழந்தையை தத்தெடுக்க நினைத்த கரண் அந்த முடிவை மாற்றி வாடகை தாய் மூலம் தந்தையாகியுள்ளார். தந்தையாகியுள்ள கரணுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English summary
Karan Johar who dons many hats- director, producer, actor, talk show host, emcee and author, is now a become a single father via surrogacy to twins, Yash and Roohi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil