Don't Miss!
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
நோ அரசியல்! இறங்கி வேலை செய்யுங்கள்! கலெக்டர்களுக்கு ''ஃபுல் ஃப்ரீடம்'' வழங்கிய முதலமைச்சர்!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேஜிஎஃப் படத்தை இந்தியில் எடுத்திருந்தால்...பிரபல டைரக்டர் சொன்ன பகீர் தகவல்
மும்பை : இந்திய சினிமா என்றாலே எப்போதும் பாலிவுட் படங்கள் தான். ஆனால் சமீப ஆண்டுகளாக அவை தலைகீழாக மாறி உள்ளது. யாரும் எதிர்பாராத விதத்தில் மிக மோசமான ஒரு நிலையை பாலிவுட் படங்கள் சந்தித்து வருகின்றன.
சமீப காலமாக பாலிவுட்டில் ரீமேக் படங்களே அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. அதுவும் தென்னிந்திய மொழிகளில் பிளாக் பஸ்டரான படங்களின் கதைகளே ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.
பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் சமீப காலத்தில் வந்ததாக தெரியவில்லை. அதிக எதிர்பார்க்கப்படும் படங்களும் தோல்விப் படங்களாகவே ஆகின்றன.
புஷ்பா,
கேஜிஎஃப்-2
படத்திற்கு
டப்பிங்
பேச
கஷ்டப்பட்டேன்..பிரபல
டப்பிங்
ஆர்டிஸ்ட்
சேகர்
பேட்டி

மோசமான தோல்வி
அதிலும் இந்த ஆண்டில் கங்கனா ரணாவத் நடித்த தாகத், அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் ப்ருத்விராஜ் போன்ற படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. இதுவரை எந்த இந்திய படமும் சந்தித்திராத அளவிற்கு தாகத் படம் 78 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. சாம்ராட் ப்ருத்விராஜ் படம் ஒரு நாளில் மொத்தமே 11 டிக்கெட்டுகள் தான் விற்பனையாகி உள்ளன.

கவனத்தை ஈர்த்த பிரபலம்
பாலிவுட்டின் இந்த நிலைக்கு காரணம் என்ன, இதிலிருந்து எவ்வாறு மீண்டு வரலாம் என பாலிவுட்டை சேர்ந்த பலரும் அடிக்கடி தங்களின் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்திய மாஸ் ஹிட் படமான கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பிரபல டைரக்டர் கரண் ஜோகர் கூறி உள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாக்கள் கதையில் பெஸ்ட்
பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், தமிழ் சினிமாவும், மலையாள சினிமாவும் எப்போதும் கதையில் வலுவாக இருப்பவை. கமர்ஷியல் ரீதியாகவும், அழகாகவும் கதை கொண்ட படங்களை உருவாக்குவார்கள். ஆனால் கன்னட சினிமாவிற்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. கேஜிஎஃப் படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது.

கேஜிஎஃப் அடித்து நொறுக்கியது
பலரின் கருத்துக்களை கேஜிஎஃப் மாற்றி உள்ளது. அவர்கள் யாருடைய பேச்சுக்களையும் கேட்பதில்லை. தங்களை முழுவதுமாக நம்புகிறார்கள். தங்களின் சொந்த பலத்தை நம்பி படம் எடுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றி அடைகிறார்கள். அதில் நாம் பின்தங்கி இருக்கிறோம். நமது பலம், பலவீனம் என்ன என்பதை நாம் முழுவதுமாக அறியவில்லை.

இந்தியில் கேஜிஎஃப் 2 எடுத்திருந்தால்...
கேஜிஎஃப் 2 படத்தை பாலிவுட்டில் எடுத்திருந்தால் விமர்சகர்கள் எங்களை கொன்றிருப்பார்கள். திட்டி தீர்த்திருப்பார்கள். ஆனால் அதே படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. பல சாதனைகளை செய்துள்ளது. திடீரென பயோபிக் படங்களும் வெற்றி பெறுகின்றன. பயோபிக் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video

இதெல்லாம் நாம் செய்யனும்
தற்போது தென்னிந்திய மொழி படங்கள் அனைவரையும் ஈர்த்து வருகின்றன. நாமும் அதை போல் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நம்முடைய பலவீனங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ப்ரோமோஷன், மார்க்கெட்டிங் போன்ற விஷயங்களை நாம் தவற விடுகிறோம். அதை சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.