»   »  இது யார் தெரியுமா, யார் தெரியுமா: நடிகரின் மகளை மாஞ்சு மாஞ்சு அறிமுகப்படுத்திய இயக்குனர்

இது யார் தெரியுமா, யார் தெரியுமா: நடிகரின் மகளை மாஞ்சு மாஞ்சு அறிமுகப்படுத்திய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தனது பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் சயிப் அலி கானின் மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தனது பிறந்தநாளை கடந்த வாரம் கொண்டாடினார். பாலிவுட் பிரபலங்களுக்கு தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார்.

பார்ட்டிக்கு நடிகர், நடிகைகளின் வாரிசுகளும் வந்திருந்தார்கள்.

சாரா

சாரா

நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா அலி கான், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகியோரும் வந்திருந்தனர். இதில் சாராவை மட்டும் பார்ட்டிக்கு வந்தவர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார் கரண்.

 கரண்

கரண்

சாராவை அழைத்துச் சென்று பார்ட்டிக்கு வந்த ஒவ்வொருவரிடமும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் கரண். ஆலியா பட் நடிக்க வரும் முன்பு ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் அவரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் கரண் என்பது குறிப்பிடத்தக்கது.

 படம்

படம்

சாராவை கரண் தனது படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் செய்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சாரா அபிஷேக் கபூர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை வைத்து இயக்கும் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறாராம்.

 சுஷாந்த்

சுஷாந்த்

சுஷாந்த் ஏற்கனவே அபிஷேக் கபூர் இயக்கத்தில் கை போச்சே படத்தில் நடித்துள்ளார். சுஷாந்த் தற்போது ரப்தா படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடிகை க்ரிட்டி சனோனை காதலிப்பதாக கூறப்படுகிறது.

English summary
Bollywood director Karan Johar has introduced actor Saif Ali Khan's daughter Sara to everyone who attended his birthday bash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil