»   »  கரன் ஜோஹருடன் கை கோர்க்கும் மணிரத்னம்... ஓகே கண்மணியை இயக்குகிறார்!

கரன் ஜோஹருடன் கை கோர்க்கும் மணிரத்னம்... ஓகே கண்மணியை இயக்குகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் வெற்றிப் பெற்ற மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படம் இப்போது இந்திக்குப் போகிறது

மணிரத்னமே எதிர்ப்பார்க்காத வெற்றியைத் தந்த படம் இந்த காதல் கண்மணி. துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இரு தசாப்தங்களாக இழந்த புகழை, அடைந்த தோல்விகளை ஈடுகட்ட மணிரத்னத்துக்கே உதவியாக இருந்த படம்.

Karan Johar join hands with Mani Rathnam

இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் கரன் ஜோஹர். ஆனால் இயக்கப் போவது அவரல்ல. அவரது தர்மா புரொக்ஷன்ஸ் தயாரிக்க, அலைபாயுதே படத்தை ஹிந்தியில் இயக்கிய மணி ரத்னத்தின் சீடர் ஷாத் அலி, ஓகே கண்மணியின் ரீமேக்கையும் இயக்க உள்ளார். ஷாத் அலி இதுவரை 4 ஹிந்திப் படங்களை இயக்கியுள்ளார்.

ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்கள். இந்தப் படத்திலும் பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் இணைகிறார்கள்.

மணி ரத்னத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறேன் என்று இயக்குநர் கரன் ஜோஹர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
For the first time Bollywood biggie Karan Johar is joining hands with ace director Mani Rathnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil