»   »  இரட்டை குழந்தைகளை பாலிவுட் கண்ணில் காட்டாமல் வைக்கும் 'அந்த' இயக்குனர்

இரட்டை குழந்தைகளை பாலிவுட் கண்ணில் காட்டாமல் வைக்கும் 'அந்த' இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தனது இரட்டைக் குழந்தைகளை சில காலம் யார் கண்ணிலும் காட்டாமல் வைக்கப் போகிறாராம்.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அண்மையில் ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார்.

அந்த குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்ததால் 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தன.

கரண்

கரண்

கரண் ஆண் குழந்தைக்கு தனது தந்தையின் பெயரான யஷ் மற்றும் பெண் குழந்தைக்கு தனது தாயின் பெயரான ஹிரூவை உல்டா செய்து ரூஹி என்றும் பெயர் வைத்துள்ளார்.

குழந்தைகள்

குழந்தைகள்

கரண் தனது இரட்டைக் குழந்தைகளை நேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றார். குழந்தைகளை பார்க்க பாலிவுட் பிரபலங்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்த அளவுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் கரணுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

பாலிவுட்

பாலிவுட்

குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு தொட்டில்கள் செய்துள்ளார் கரண். மேலும் குழந்தைகளை பாலிவுட் பிரபலங்கள் கண்ணில் காட்டாமல் சில காலம் வைக்கவும் தீர்மானித்துள்ளார் கரண்.

English summary
Drector Karan Johar has decided to keep his twins away from Bollywood celebrities for sometime as per doctor's advise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil