»   »  சின்னப் படம்.. பெரிய இதயம்... "காக்கா முட்டை"க்கு கரண் ஜோகர் புகழாரம்!

சின்னப் படம்.. பெரிய இதயம்... "காக்கா முட்டை"க்கு கரண் ஜோகர் புகழாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து டிவிட் போட்டுள்ளார் பிரபல இயக்குநர் கரண் ஜோகர்.

முன்னணி இந்தி இயக்குநரான கரண் ஜோகர், காக்கா முட்டை படத்தை் பார்த்து தான் அசந்து போய் விட்டதாகவும் கூறியுள்ளார்.


சின்னப் படமாக இருந்தாலும் அருமையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


தனுஷ் தயாரிப்பு

தனுஷ் தயாரிப்பு

நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டாக தயாரித்து வெளியான படம்தான் காக்கா முட்டை. இப்படத்தை இயக்கியது மணிகண்டன்.


2 பசங்க

2 பசங்க

இந்தப் படத்தில் விக்னேஷ், ரமேஷ் என இரு சிறார்கள் நடித்துள்ளனர். இவர்களின் தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். குடிசையில் வசிக்கும் இந்த சிறார்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை இது.


ஒரே ஒரு பீட்சா.. அது போதும்!

ஒரே ஒரு பீட்சா.. அது போதும்!

எப்படியாவது ஒரு பீட்சாவை சாப்பிட வேண்டும். அதுதான் இந்தப் படத்தின் கதை நாயகர்களின் லட்சியம். இதற்காக கடுமையாக முயற்சிக்கிறார்கள்.


ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை

ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை

கடைசியில் அவர்களது கனவும் நிறைவேறுகிறது.. இருப்பினும் ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் இருவரும். இதுதான் காக்கா முட்டை படத்தின் கதை.


கரண் ஜோகர்

இந்தப் படம் குறித்து ஜோகர் போட்டுள்ள டிவிட்டில், காக்கா முட்டை அருமையான படம். பார்த்து அசந்து விட்டேன். சின்னப் படம்தான்.. ஆனால் பெரிய இதயம். படத்தை வெளியிட்ட பாக்ஸ்ஸ்டார் ஹிந்திக்கும், தனுஷ் கஸ்தூரி ராஜாவுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ஜோகர்.


English summary
Filmmaker Karan Johar is all praise for the National-Award winning Tamil film "Kaaka Muttai". Johar, 43, was "genuinely moved" by the film, written and directed by M Manikandan. "'Kaaka Muttai' is a gem of a film! Genuinely moved by it... Small film... with a huge heart! Congrats foxstarhindi dhanushkraja," Johar tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil