»   »  பால்கியின் கி அண்ட் கா அபாரம்!- கரண் ஜோஹர்

பால்கியின் கி அண்ட் கா அபாரம்!- கரண் ஜோஹர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷமிதாப்புக்குப் பிறகு பால்கி இயக்கத்தில் உருவாகி வரும் கி அண்ட் கா படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார் முன்னணி பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்.

கி அண்ட் கா என்பது லட்கி அன்ட் லட்கா என்பதன் விரிவாக்கம். அதாவது 'பொண்ணு பையன்'.

இந்தப் படத்துக்கு இளையராஜா, மிதுன், மீட் பிரதர்ஸ் என மூன்று இசையமைப்பாளர்கள். பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார்.

Karan Johar praises Ki and Ka

அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் நடிதத்துள்ள இப்படத்துக்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட இயக்குநர் கரன் ஜோஹர் படம் பற்றி கூறியதாவது:

கி அண்ட் கா அபாரமாக உள்ளது. கதைக்களம் புத்தம் புதிதாக உள்ளது. வித்தியாசமான இந்தக் கதையில் அர்ஜுன் கபூரும் கரீனா கபூரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். பால்கியின் கதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளது. அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்," என்றார்.

English summary
Bollywood filmmaker Karan Johar has praised R Balki's forthcoming movie Ki And Ka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil