40 பேருக்கு கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாக மாறியதா கரண் ஜோஹர் பர்த்டே பார்ட்டி.. அவர் என்ன சொல்றாரு?

மும்பை: பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் பார்ட்டி கடந்த மே 25ம் தேதி யாஷ் ராஜ் சோப்ரா ஸ்டூடியோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான் தொடங்கி அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, கஜோல், கரீனா கபூர் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், அவரது பர்த்டே பார்ட்டி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார் கரண் ஜோஹர்.

கரண் ஜோஹர் பர்த்டே பார்ட்டி

கரண் ஜோஹர் பர்த்டே பார்ட்டி

கடந்த மே 25ம் தேதி பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தனது 50வது பிறந்தநாளை வெகு விமர்சையாக யாஷ் ராஜ் சோப்ரா ஸ்டூடியோவில் பல கோடிகள் செலவு செய்து கொண்டாடினார். இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் அந்த பர்த்டே பார்ட்டியில் பங்கேற்றனர். பார்ட்டிக்கு வந்த பல நடிகைகளும் கரண் ஜோஹரை கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்த புகைப்படங்கள் வெளியாகின.

ஏகப்பட்ட ஸ்டார்கள்

ஏகப்பட்ட ஸ்டார்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன், சபா ஆசாத், கரீனா கபூர், ராஷ்மிகா மந்தனா, அனன்யா பாண்டே, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விஜய் தேவரகொண்டா, கஜோல், மலைகா அரோரா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அந்த பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

40 பேருக்கு கொரோனா

40 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக சினிமா முதல் பல துறைகளை முடக்கி போட்டது கொரோனா எனும் கொடிய நோய். பல பெரிய நடிகர்களின் உயிரையும் ஈவு இரக்கமின்றி காவு வாங்கியது. இந்நிலையில், கரண் ஜோஹர் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஷாருக்கானுக்கு கொரோனா

ஷாருக்கானுக்கு கொரோனா

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் ஆதித்யா கபூர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாசிட்டிவாக வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒரு வார காலத்துக்குள் நடிகை நயன்தாராவின் திருமண விழாவிலும் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானுக்கு நெகட்டிவ் வந்த பின்னர் தான் அவர் விழாவில் கலந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

கரண் ஜோஹர் பதில்

கரண் ஜோஹர் பதில்

இந்நிலையில், தனது பிறந்தநாள் பார்ட்டி கொரோனா ஹாட்ஸ்பாட் என கூறப்படுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும், ஏகப்பட்ட விழாக்களும், ஷூட்டிங்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பெரிய அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் என்னை குற்றவாளியாக மாற்ற நினைப்பதை தான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும், இந்த பிரச்சனைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X