»   »  ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு

ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பொது இடங்களில் சுற்றக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தடா போட்டுள்ளாராம்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரை தங்களின் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர் யார் படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான கரண் ஜோஹார் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார் பல பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்தவர். இந்நிலையில் தான் அவர் ஜான்வி கபூரை பாலிவுட் படத்தில் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

ஜான்வி

ஜான்வி

கரண் ஜான்வியை படத்தில் ஏதோ வித்தியாசமாக காட்ட உள்ளாராம். இந்நிலையில் படம் ரிலீஸாகும் வரை ஜான்வியை யார் கண்ணிலும் படக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளாராம் கரண்.

உத்தரவு

உத்தரவு

ஜான்வி தற்போது பார்ட்டிகள், விருது விழாக்கள் என பல இடங்களுக்கு சென்று வருகிறார். அழகு அழகு உடைகளில் அவர் உலா வருகிறார். இனி ஜான்வியை எங்கும் செல்லக் கூடாது என்று கரண் கூறியுள்ளாராம்.

சாய்ரத்

சாய்ரத்

கரண் சாய்ரத் படத்தை ரீமேக் செய்கிறார். அதில் தான் ஜான்வி நடிக்க உள்ளார். சாய்ரத் ரீமேக்கில் ஜான்வி நடிப்பதை அவரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதி செய்துள்ளார்.

English summary
According to reports, director Karan Johar has ordered Jhanvi Kapoor to stay away from public and media till her debut movie's release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil