Just In
- 37 min ago
முதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்!
- 52 min ago
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
- 1 hr ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 2 hrs ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
Don't Miss!
- News
புதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்!
- Sports
என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!
- Automobiles
மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கந்தா' படத்துக்கு தடை- சென்னை நீதிமன்றம் உத்தரவு

இந்த நீதிமன்றத்தில் மோகன்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் கரண் நடிப்பில் 'கந்தா' என்ற சினிமா படத்தை வி.பி. பிலிம்ஸ் உரிமையாளர் பழனிவேல், அவரது மனைவி கல்பனா பழனிவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தை பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார்.
படத் தயாரிப்பதற்காக என்னிடம் ரூ.25 லட்சத்தை 2009-ம் ஆண்டு வாங்கினார்கள். கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 2 செக்'குகள் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தினேன். ஆனால் அது காசாகவில்லை. அவர்களது கணக்கில் பணம் இல்லை என்று அந்த 'செக்'குகள் திரும்பி வந்துவிட்டன.
இதையடுத்து பழனிவேலுவிடம் பணத்தைக் கேட்டேன். அப்போது அவர் உத்தரவாத பத்திரத்தை எழுதிக் கொடுத்தார். ரூ.25 லட்சம் கடனை, 'கந்தா' படம் வெளியிடுவதற்கு முன்பு தந்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் எனக்கு பணத்தை திருப்பித்தராத நிலையிலேயே படத்தை வெளியிட பழனிவேலு முயற்சிக்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைக்காலத் தடை
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்ராஜ் விசாரித்தார். ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாகத் தெரிவதால், 'கந்தா' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அவர் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.