»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

போலி திரைப்பட சி.டிக்களை ஒழிக்க ஒற்றுமையாகப் போராட்டம் நடத்துவோம் என கோவையில் திரைப்படநடிகர் கரண் கூறினார்.

கோவையில் ஜி.ஆர்.டி கல்லூரியில் கலை விழா நடந்தது. இதில் நடிகர் கரண் கலந்து கொண்டார். அப்போது அவர்நிருபர்களிடம் கூறுகையில்,

புதிய திரைப்படங்களின் போலி சி.டி.,க்களை ஒழிக்க எங்களால் இயன்றவரை ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தமுடிவு செய்துள்ளோம். இதற்காக ஒத்த கருத்துடைய திரைப்பட ஊழியர்களை ஒன்று திரட்டும் பணியில்ஈடுபட்டுள்ளோம். கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் இத்தகைய சி.டிக்களை ஒழிக்க ஒத்துழைப்புத் தர வேண்டும்.

சின்னத் திரையால், திரைப்படங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அது வேறு, இது வேறு.

இரண்டும் தனித்தனியாக சுதந்திரமாகச் செயல்படக் கூடியவை.

திரை உலகில் போட்டி பொறாமைகளைத் தவிர்த்து, எல்லாக் கலைஞர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் எண்ணம், எல்லோரிடம் வர வேண்டும் என்றார்.

பின்னர் கல்லூரி விழாவில் பேசுகையில், திரைப்படத்தில் நடிக்க விரும்பும், நடிகனாக விரும்பும் மாணவர்கள்தங்கள் கல்லூரி வாழ்க்கையிலேயே ஒரு ஹீரோவாக காட்டிக் கொள்ள வேண்டும். அப்போது தான், ஹீரோவாகமுடியும். நடிகனும் சாதாரண மனிதன் தான்.

நான் கல்லூரிகளில் படிக்கவில்லை என்றாலும், கல்லூரி மாணவனாக ஏராளமான படங்களில் நடித்துள்ளேன்என்றார். கோவை அருகே மேட்டுப்பாளையத்துக்கு படப்பிடிப்பிற்காக வந்த கரண், ஜி.ஆர்.டி, கல்லூரிமாணவர்களின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொண்டார்.

Read more about: cinema, hero, karan, tamilnadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil