»   »  நடிகை கரிஷ்மா கபூருக்கு விவாகரத்து வழங்கியது உச்ச நீதிமன்றம்

நடிகை கரிஷ்மா கபூருக்கு விவாகரத்து வழங்கியது உச்ச நீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கு அவரது கணவர் சஞ்சய் கபூரிடமிருந்து விவாகரத்தை அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கரீனா கபூர், சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு சமைரா (11), கியான் ராஜ் (6) என இரு குழந்தைகள் உண்டு.

Karishma Kapoor gets divorce from Sanjay Kapoor

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் 2014-ல் பரஸ்பரம் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்கள். ஆனால் ஜீவனாம்சம் உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜீவனாம்சம், குழந்தைகள் வளர்ப்பு தொடர்பாக இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி, குழந்தைகளை கரிஷ்மா கபூர் வளர்க்க உள்ளார். குழந்தைகளை விடுமுறை தினங்களின்போது சஞ்சய் கபூர் நேரில் வந்து பார்க்கவும் கரீஷ்மா சம்மதித்துள்ளார். அதன்படி இந்த விவாகரத்து வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

English summary
The amicable settlement of the matrimonial dispute between Bollywood actor Karisma Kapoor and her estranged businessman husband Sunjay Kapur with mutual consent, yesterday got a seal of approval from the Supreme Court.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil