»   »  கரீனா கபூரின் அக்கா கரீஷ்மாவுக்கு 2வது கல்யாணம்.. தொழிலதிபரை மணக்கிறார்!

கரீனா கபூரின் அக்கா கரீஷ்மாவுக்கு 2வது கல்யாணம்.. தொழிலதிபரை மணக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை கரீனா கபூரின் அக்காவும், நடிகையுமான கரிஷ்மா கபூர் 2 வது திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் கரிஷ்மா கபூர்(42). இவருக்கும் தொழிலதிபர் சஞ்சய் கபூர் என்பவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்தத் தம்பதிகளுக்கு சமைரா கபூர், கியான் ராஜ் கபூர் என 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று முறைப்படி பிரிந்து விட்டனர்.

Karishma Kapoor Second Marriage

தற்போது கரிஷ்மா 2 வது திருமணம் செய்யப் போவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரிஷ்மா கபூரை திருமணம் செய்யப்போகும் சந்தீப் தோஷ்னிவாலும் ஒரு தொழிலதிபர் தான்.

விரைவில் இருவரின் திருமணம் நடைபெறும் எனவும் இதற்கான ஏற்பாடுகள் ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கரிஷ்மா கபூர்- சந்தீப் தோஷ்னிவால் ஜோடியாக சென்றபோது அங்கு வந்திருந்த கரிஷ்மாவின் முன்னாள் கணவர் சஞ்சய், சந்தீப்பை அடிக்கப் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று சஞ்சய் மறுப்புத் தெரிவித்தார். எனினும் கரிஷ்மா-சந்தீப் திருமணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

English summary
Sources said Actress Karishma Kapoor Married Sandeep Toshniwal Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil