»   »  ஹாலிவுட் ஸ்கை திரைப்பட விழாவில் பங்கேற்றும் தமிழ்ப் படம் 'கர்மா'!

ஹாலிவுட் ஸ்கை திரைப்பட விழாவில் பங்கேற்றும் தமிழ்ப் படம் 'கர்மா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் சிறு முதலீட்டில் உருவாக்கப்படும் தமிழ்ப் படங்கள் இங்கே வெளியாகின்றனவோ இல்லையோ... உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் குவித்து வருகின்றன.

காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை போன்ற படங்கள் இதில் தனி சாதனையே படைத்துவிட்டன.

Karma selected for Hollywood Sky Film Festival

இந்த வரிசையில் தற்போது ‘கர்மா' என்னும் படமும் சேர்ந்துள்ளது.

ஆர்.அர்விந்த் எழுதி இயக்கியுள்ள ‘கர்மா' படம் ஹாலிவுட்டில் நடைபெறும் ஹாலிவுட் ஸ்கை திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திரைப்பட விழா குழுவினர் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

திரில்லர் படமான கர்மா, சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆல் லைட்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் (All Lights India International Film Festival) முதன் முறையாக திரையிடப்பட்டது குறிப்படத்தக்கது.

Karma selected for Hollywood Sky Film Festival

இப்படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். எல்.வி.கணேசன் இசையமைத்துள்ளார். வி.பி.சிவானந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Read more about: karma, கர்மா
English summary
Karma, written and directed by R. Arvind has been officially selected for Hollywood Sky Film Festival which promotes the advancement of innovative cinema from emerging filmmakers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil