கர்ணன் படத்தில் மேக்கப் இல்லாமல்..அப்படியே நடிச்சேன்..ரஜிஷா சுவாரஸ்ய பேட்டி !

கர்ணன் படத்தில் மேக்கப் இல்லாமல்..அப்படியே நடிச்சேன்..ரஜிஷா சுவாரஸ்ய பேட்டி !

Recommended Video

தமிழில் நிறைய படம் பண்ணனும் |Actress Rajisha Vijayan Talk Part-2| Filmibeat Tamil

சென்னை : கர்ணன் பட நாயகி ரஜிஷா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

ஜூன், ஃபைனன்ஸ் மற்றும் ஸ்டாண்ட் அப் போன்ற மலையாளப்படங்களில் நடித்துள்ளார் ரஜிஷா.

கர்ணன் இவரது முதல் திரைப்படமாகும். முதல் திரைப்படமே முன்னணி நடிகர் தனுஷூடன் என்பதால் இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கர்ணன்

கர்ணன்

கர்ணன் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மாரிசெல்வராஜ். இவரின் அடுத்தப்படமான கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

முன்பதிவு

முன்பதிவு

இப்படத்தில், 96 புகழ் கௌரி கிஷன் ,லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது. இதற்காக இன்று காலை முதலே முன்பதிவு தொடங்கி உள்ளது.

அனைத்து பாடல்களும் ஹிட்

அனைத்து பாடல்களும் ஹிட்

இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்டா வரச்சொல்லுங்க, திரௌபதி முத்தம், மஞ்சனத்தி புராணம் , உட்ராதீங்க எப்போ என வெளியான அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளன. பண்டாரத்தி புராணம் பாடல் வரி சர்ச்சைக்குள்ளானதை அடுத்து அது மஞ்சனத்தி புராணமாக மாற்றப்பட்டது.

மேக்கப் இல்லாமல்

மேக்கப் இல்லாமல்

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ரஜிஷா அளித்துள்ள பேட்டியில், நான் நடித்த ஜூன் படத்தைப் பார்த்துதான் மாரி செல்வராஜ் இப்படத்தில் நடிக்க என்னை அழைத்தார். இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது. மேலும் உடல்வாகுக்கு பொருத்தமான உடையுடன் நடித்தேன். அந்த படத்தில் நான் ஒரு மண் மாதிரி இருப்பேன், முக்கியமான இடத்தில் மேக் அப் இல்லாமல் நடத்திருப்பேன் என்று கூறினார்.மேலும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் ரஜிஷா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X