Don't Miss!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்னை காதலியா கூட பாவிச்சிருக்காரு அந்தோணி தாசன்..கண்டா வர சொல்லுங்க கிடாக்குழி மாரியம்மாள் பேச்சு!
என்னை காதலியா கூட பாவிச்சிருக்காரு அந்தோணி தாசன்.. கண்டா வர சொல்லுங்க கிடாக்குழி மாரியம்மாள் பேச்சு!
சென்னை: பிரபல கிராமிய பாடகர் அந்தோணி தாசன் என்னை காதலியா கூட பாவிச்சிருக்காரு என கர்ணன் படத்தில் "கண்டா வர சொல்லுங்க" பாடலை பாடிய கிராமிய பாடகி கிடாக்குழி மாரியம்மாள் நகைச்சுவையாக பேசியது டிரெண்டாகி வருகிறது.
கருணாஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல் மூலம் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார் அந்தோணி தாசன்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு இவர் பாடிய சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
'பாம்பு சட்டை... கீர்த்தி சுரேஷ், ஒரு சோற்றுப் பருக்கையின் கதை...' - இயக்குநர் ஆடம் தாசன் பேட்டி!

அந்தோணி தாசன்
திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலுக்கு பிறகு கானா பாலாவுடன் இவர் இணைந்து பாடிய காசு பணம் துட்டு மணி மணி பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது. பாண்டிநாடு, குக்கூ, முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, ஆம்பள, காக்கி சட்டை, ஜில் ஜங் ஜக், கவண், பேட்ட, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடி உள்ளார்.

இசை நிறுவனம்
இந்த ஆண்டு இவர் பாடிய டிப்பாம் டப்பாம் பாடல் சூப்பர் டூப்பர் அடித்தது. அவியல் மற்றும் எம்ஜிஆர் மகன் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ள அந்தோணி தாசன் தற்போது புதிய இசை நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அதன் துவக்க விழா நிகழ்ச்சியில் கர்ணன் படத்தில் "கண்டா வர சொல்லுங்க" பாடல் பாடி பிரபலமான கிடக்குழி மாரியம்மாள் பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.

காதலியா பாவிச்சிருக்காரு
அந்தோணி தாசன் என்னை அம்மாவா, அண்ணியா ஏன் சொல்லப் போனா காதலியாக் கூட பாவிச்சிருக்காரு.. காதலுக்கு எதுக்குங்க வயசு.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து டூயட் பாட்டு பாடினா அப்படி இருக்கும் என பேசியதும் விழாவில் கலந்து கொண்ட பலரும் அரங்கம் அதிரும் அளவுக்கு சிரித்து விட்டனர். எங்களுக்குள் இருக்கும் நட்பு மிகப்பெரியது என அந்தோணி தாசன் உடனான நட்பு குறித்து பேசி உள்ளார் கிடாக்குழி மாரியம்மாள்.

கஷ்டப்பட்டு வந்தோம்
ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்க எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.. சினிமாவில் இப்படியொரு இடத்தை அந்தோணி தாசன் பிடிச்சிருக்காரு என்றால், அதற்கு அவர் பட்ட கஷ்டமெல்லாம் எண்ணிக்கையில் அடங்காது என அந்தோணி தாசனின் கடந்து வந்த பாதைகளையும் பேசி அவரது இசை நிறுவனம் பெருசா வளரணும் என வாழ்த்தி உள்ளார்.