»   »  'எங்க ஏரியாவில் அண்ணன்தான் கில்லி' - 'மெர்சல்' வசூல் பற்றி கர்நாடக விநியோகஸ்தர்

'எங்க ஏரியாவில் அண்ணன்தான் கில்லி' - 'மெர்சல்' வசூல் பற்றி கர்நாடக விநியோகஸ்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : விஜய்யின் 'மெர்சல்' இப்போது தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படம். தமிழைத் தாண்டி வெளியான எல்லா இடங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

கர்நாடகாவில் ஹாரிஸன் ஸ்டூடியோஸ் தான் மெர்சல் படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருந்தது. மெர்சல் படத்தின் கன்னட விநியோகஸ்தர் டோனி 'மெர்சல்' பட கலெக்ஷன் குறித்து பேசியிருக்கிறார்.

Karnataka distributor about mersal collection

கர்நாடகாவில் மெர்சல் தான் இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம். 'மெர்சல்' படத்தின் கர்நாடக தியேட்டர் உரிமை 6 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தது. 2 வார முடிவில் ரூ. 12.25 கோடி வசூலித்திருக்கிறது என்று கூறியுள்ளார் டோனி.

ரஜினியின் கபாலி படம் கர்நாடகாவில் ரூ. 15.5 கோடி வரை வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. விரைவில் கபாலி பட சாதனையை விஜய்யின் மெர்சல் படம் முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் கர்நாடகாவில் வெளியான விஜய்யின் தெறி படம் ரூ. 7 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைகளின் புண்ணியத்தில் விஜய் கர்நாடகாவிலும் வசூல் கோட்டை கட்டியிருக்கிறார்.

English summary
Karnataka theater distribution of 'Mersal' was bought for 6 crores. At 2 weeks at Rs. 12.25 crore has been collected by mersal. In Karnataka, Mersal is the highest grossing film of Vijay.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos