»   »  லதா ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி!

லதா ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோச்சடையான் படத்துக்கு கடன் வாங்கியது தொடர்பாக லதா ரஜினிகாந்த் மீது பைனான்சியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.ட

ரஜினி நடிக்க, சௌந்தர்யா ரஜினி இயக்கிய படம் கோச்சடையான். இந்தப் படத்தைத் தயாரிக்க மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ 6.84 கோடியை கடனாகப் பெற்றது.

Karnataka High Court dismisses case on Latha Rajini

இந்தக் கடனை மீடியா ஒன் நிறுவனம் திருப்பித் தரவில்லை என்று ஆட் பியூரோ வழக்குத் தொடர்ந்தது. மேலும் இந்தக் கடனுக்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த், போலியான ஆவணங்களைத் தங்களுக்குக் கொடுத்துவிட்டதாக இன்னொரு வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆட் பியூரோ பதிவு செய்தது.

ஆனால் இவை மோசடியான குற்றச்சாட்டுகள் என லதா ரஜினி மறுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதி செய்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

English summary
The Karnataka High Court has dismissed the case against Latha Rajinikanth filed by a finance company.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil