அதுதாங்க சூப்பர் ஸ்டார் பவரு.. ரஜினிகாந்துக்கு குடை பிடித்த கர்நாடக அமைச்சர்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக நேற்று கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

கர்நாடக விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அந்த விழாவிற்கு ரஜினி வருகை தந்த போது அன்போடு கர்நாடக அமைச்சர் ரஜினிகாந்துக்கு குடை பிடித்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ஸ்டைல் சாம்ராட்

ஸ்டைல் சாம்ராட்

70 வயதை கடந்த நிலையிலும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என ஸ்டைல் சாம்ராட்டாக தனி விமானம் மூலமாக பெங்களூருவுக்கு ரஜினிகாந்த் நேற்று பறந்து சென்றார். அவரை வரவேற்க கர்நாடகவின் முக்கிய அமைச்சர்கள் விமான நிலையத்திற்கே சென்று ராயல் வரவேற்பு அளித்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின.

புனீத் ராஜ்குமாரை புகழ்ந்து

புனீத் ராஜ்குமாரை புகழ்ந்து

இளம் வயதிலேயே மறைந்து விட்ட அப்பு என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் புனீத் ராஜ்குமார் செய்த சாதனைகள் குறித்தும் அவரது நற்பண்புகள் குறித்தும் மேடையில் பேசிய ரஜினிகாந்த் தனது கரங்களால் கர்நாடக ரத்னா விருதை புனீத் ராஜ்குமார் சார்பாக அவரது மனைவி அஸ்வினிக்கு வழங்கினார்.

ஒற்றுமை முக்கியம்

ஒற்றுமை முக்கியம்

கர்நாடக மக்களுக்கும் ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, பேதம் இல்லாமல் மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று தாய் புவனேஸ்வரி, அல்லா, இயேசுவிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ரஜினிகாந்த்.

ரஜினிக்கு குடை பிடித்த அமைச்சர்

ரஜினிக்கு குடை பிடித்த அமைச்சர்

கர்நாடகாவில் தோட்டக்கலை அமைச்சராக இருக்கும் முனிரத்னா நிகழ்ச்சியின் போது மழை பெய்ததால் நடிகர் ரஜினிகாந்துக்கு குடை பிடித்து சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. எங்க சூப்பர்ஸ்டார் பவரை பாருங்க என ரஜினி ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்துள்ளனர்.

ரஜினியின் நண்பர்

ரஜினியின் நண்பர்

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை போலவே முனிரத்னாவும் ஆட்டோ டிரைவராக இருந்து அமைச்சரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்லைன் நிறுவனம் தான் ரஜினி கலந்து கொள்ளும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட நிலையில், அமைச்சர் முனிரத்னா ரஜினிக்காக குடை பிடித்துச் சென்றா என்றும் லிங்கா ஆடியோ லாஞ்சுக்காக அவர் சென்னை வந்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கன்னட திரையுலகில் பல படங்களையும் முனிரத்னா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X