Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடு…தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!
சென்னை : கர்நாடகாவில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏப்ரல் 7ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு?
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெங்களுரில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 3500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறப்பு விகிதம் அதிகரிப்பு
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே போன்று தென் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. அதே போல இறப்பு விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்
இந்நிலையில்,கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய உத்தரவு
கொரோனாவின் இரண்டாவது அலை வீரியம் மிக்கதாக இருப்பதால் அது 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களை அதிக அளவில் தாக்குகிறது. இதனால் திறக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் படி வரும் 7ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.