»   »  அண்ணன் போலவே தம்பிக்கும் தெலுங்கில் மவுசு.. நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் கார்த்தி!

அண்ணன் போலவே தம்பிக்கும் தெலுங்கில் மவுசு.. நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெலுங்கு படத்தில் நடிக்கும் கார்த்தி!

சென்னை : அண்ணன் சூர்யாவைப் போல, தம்பி கார்த்திக்கும் டோலிவுட்டில் ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுடன், 'தோழா' படத்தில் இணைந்து நடித்த பிறகு கார்த்திக்கும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

கார்த்தி நடித்திருக்கும் படங்கள், தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகின்றன. கார்த்தி, நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த 'தோழா' படம் மட்டும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டது.

Karthi to act telugu film

தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்தி, தெலுங்கில், 'நீடி நாடி ஓகே கதா' படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இயக்குநர் வேணு உடுகுலா, கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதை கார்த்திக்கு பிடித்துப்போகவே அடுத்தக்கட்ட வேலையைத் துவங்கும்படி கூறியிருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகிறது.

English summary
Karthi is currently acting in 'Kadaikkutty singam, is reported to have acted in 'Needi Naadi Okey Katha' directed by Venu Udugula.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X