»   »  நடிகர் சங்கத் தேர்தலை போர்க்களமாக்கியது ராதாரவிதான்! - கார்த்தி

நடிகர் சங்கத் தேர்தலை போர்க்களமாக்கியது ராதாரவிதான்! - கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத் தேர்தலை போர்க்களமாக மாற்றியது ராதாரவிதான் என்று நடிகர் கார்த்தி கூறினார். மேலும் ராதாரவியை கண்டிக்க சரத்குமார் தவறியதுதான் இத்தனைப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அவர் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியைச் சேர்ந்த நடிகர்கள் கரூர் மாவட்ட நாடக நடிகர்களைச் சந்தித்து 2-ம் கட்டமாக வாக்குச் சேகரித்தனர்.

Karthi alleges Radharavi

அப்போது நடிகர் கார்த்தி பேசுகையில், "குடும்ப பிரச்சனைகளை மறந்து மக்களை சந்தோஷப்படுத்துவதற்காக நடிக்கும் நாடக நடிகர்களுக்கு நடிகர் சங்கம் எதையும் செய்யவில்லை.

நாங்கள் பொறுப்புக்கு வந்தால் வயதான நாடக நடிகர்களுக்கு பென்சன் ஏற்பாடு செய்து தரப்படும். நோய் வாய்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். கலைஞர்களுக்கு என்று நாங்கள் கேட்டதும் பலரும் உதவ முன்வருகிறார்கள். ஆனால் பொறுப்பில் இருந்தவர்கள் ஏன் இதை செய்யவில்லை?

5 பேராக தொடங்கிய இந்த அணிக்கு இப்போது 1500 பேர் வேலை செய்கிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் ஷோரூமாகவும், தியேட்டராகவும் இருந்து என்ன பயன்? நாங்கள் வெற்றி பெற்றால் நாடக நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் குறைந்த வாடகைக்கு தங்கிச் செல்லவும், உணவு அருந்தவும் ஏற்பாடு செய்வோம்.

நடிகர் சங்க தேர்தலை போர்க்களமாக மாற்றியது நடிகர் ராதாரவி. திரைப்பட நடிகர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்ச்சித்த போது சரத்குமார் சார் கண்டிக்கவில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர்கள் தான் போர்க்களமாக மாற்றிவிட்டார்கள்," என்றார்.

பொன்வண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் யாருக்கும் பணம் தரவில்லை. எங்கள் அணி வெற்றிபெற்றால் என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்து சொல்லி இருக்கிறோம். தபால் ஓட்டில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவேதான் நாடக நடிகர்களை சென்னைக்கு வாக்களிக்க வருமாறு கேட்டுள்ளோம்.

பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பொதுக்குழு தீர்மானத்தை கூட அவர்களுக்கு காட்டாத காலம் இருந்தது. நாங்கள் புகழ் போதைக்காகவோ, பணத்திற்காகவோ தேர்தலில் போட்டியிடவில்லை. தயாரிப்பாளர்கள் ஒரு அணிக்கு ஆதரவு அளித்திருப்பது தவறானது.

ரஜினி சார் ஏன் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என கேட்கிறீர்கள். எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தை சொல்லவேண்டும் என விரும்புவது தவறானது," என்றார்.

English summary
Actor Karthi alleged that it was Radharavi who changed the Nadigar Sangam election as a battlefield.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil