Viruman Twitter Review: குச்சி ஐஸ் சாப்பிட்டு கூலா அடிக்கும் கார்த்தி.. விருமன் படம் எப்படி இருக்கு?
சென்னை: சுல்தான் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் ஆன நிலையில், மீண்டும் வெள்ளித்திரையில் விருமனாக கார்த்தி வீரியம் காட்டுகிறார்.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள விருமன் படம் எப்படி இருக்கு என மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள விமர்சனங்களையும் கருத்துக்களையும் இங்கே பார்ப்போம்..

கார்த்தியின் விருமன்
முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்த கார்த்திக்கு அந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதே போல ஒரு வெற்றி மீண்டும் கிடைக்கும் என விருமன் படத்தின் மூலம் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ளார். கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரண் இந்த படத்தில் விருமனின் தாத்தாவாகவும், பிரகாஷ் ராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளனர். அறிமுக நாயகி அதிதி ஷங்கர் எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு படையெடுத்து உள்ளது.
குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கிட்டே
விருமன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் செம ஜாலியான காட்டுமிராண்டி. ஓப்பனிங் காட்சியிலேயே குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கிட்டு திருவிழா கூட்டத்தில் ரவுடிகளுடன் சண்டை போடும் காட்சியும், அதன் பிறகு சூரி அவரை கட்டிப் பிடித்து நானும் இந்த படத்தில் இருக்கேன் என தலையை காட்டும் காட்சியையும் நெட்டிசன்கள் சின்ன வீடியோ க்ளிப்பாக எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.

நல்ல புக்கிங்
475 திரையரங்குகளில் வெளியாகி உள்ள கார்த்தியின் விருமன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ரொம்ப நல்லா உள்ளதாகவும், முதல் நாள் வசூல் அமோகமாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், விருமனாவது தமிழ் திரையுலகை காப்பாற்றுகிறாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தென்னாட்ட ஆண்டதெல்லாம்
தென்னாட்ட ஆண்டதெல்லாம் எங்க தமிழ் இனம்டா.. பயமே அறியாத பரம்பரைடா..
பழச மறக்காத தலைமுறைடா.. என விருமன் பாடல் வரிகளை பதிவிட்டு ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். டைட்டில் கார்டிலேயே யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் தெறிக்கவிடுவதாகவும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

பிளாக்பஸ்டர்
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் நடிப்பு அட்டகாசம் என்றும், தியேட்டரில் விருமன் படத்தின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது என்றும், படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், பலர் விருமன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











