Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சுல்தான் ட்ரைலர்… இந்த வாரம் ரிலீசா!?
சென்னை: கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான்.
இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
திரிஷ்யம்2
3
மாஸ்டர்
பீஸ்..
ஜீத்து
ஜோசப்பை
பாராட்டிய
பிரபல
இயக்குனர்!
இந்த படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி கடந்த அக்டோபர் மாதமே நிறைவு பெற்றது. அப்போதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

படக்குழு உறுதி
படத்தை OTT யில் வெளியிடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் படக்குழு ஏப்ரல் 2ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதாக அறிவித்தது. சட்டமன்ற தேர்தல் வருவதால் சில படங்கள் பின் வாங்குகிறது, இருந்தபோதும் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என படக்குழு உறுதியாக உள்ளது.

மூன்று பாடல்கள்
படக்குழு படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டது, டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமன்றி 'ஜெய் சுல்தான்', 'யாரையும் இவளோ அழகா பார்க்கல' , & 'எப்படி இருந்த நாங்க' என மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளது. பாடல்களும் வைரலாகி வருகிறது.

இரட்டிக்கும் எதிர்பார்ப்பு
இந்நிலையில் படத்தின் 2:02 நிமிடங்கள் கொண்ட ட்ரைலர் இந்த வாரம் வெளிவரவுள்ளதாகவும், படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிக்கும் எனவும் சினிமா வட்டாரங்களிடையில் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரவுள்ளது.