தளபதி 67க்கு அப்புறம் தான் கைதி 2… படத்தின் கதை பற்றி கார்த்தி கொடுத்த சீக்ரெட் அப்டேட்!

சென்னை: நடிகர் கார்த்தியின் கேரியரில் இந்த ஆண்டு மிக முக்கியமான வருடமாக பார்க்கப்படுகிறது.

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து கார்த்தியின் படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ராஜூ முருகன், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்களில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, திரையுலகில் 15 ஆண்டுகளை கடந்துவிட்டார். முதல் படத்திலேயே நடிப்பில் தரமான சம்பவம் செய்த கார்த்தி, அடுத்தடுத்து பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, பையா, மெட்ராஸ், கைதி ஆகிய படங்கள் அவரது கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தின. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது வெளியான பொன்னியின் செல்வன் படமும், கார்த்திக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்நிலையில், கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கைதி இரண்டாம் பாகம்

கைதி இரண்டாம் பாகம்

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்களைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் டைட்டில் 'ஜப்பான்' என சொல்லப்படுகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி இரண்டாம் பாகத்தில் கார்த்தி கமிட் ஆகியுள்ளார். 2019ல் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. கார்த்தி சோலோவாக ஆக்சன் ட்ரீட் கொடுத்து மிரட்டியிருந்தார்.

அப்டேட் கொடுத்த கார்த்தி

அப்டேட் கொடுத்த கார்த்தி

முதல் படமான மாநகரம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனராஜ், கைதி வெளியான பிறகு டாப் லிஸ்ட்டில் இடம்பெற்றார். அதன் பின்னரே விஜய்யுடன் மாஸ்டர், கமல் கூட்டணியில் விக்ரம் என இரண்டு மெகா ஹிட் படங்களை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். ப்ளாக் பஸ்டர் ஹிட்டான 'விக்ரம்' படத்தின் கதை, கார்த்தியின் கைதியில் இருந்து தான் தொடங்கியது. அதனால், கைதி செகண்ட் பார்ட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமானது. இந்நிலையில், கைதி 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும் என கார்த்தி அப்டேட் கொடுத்துள்ளார்.

கைதி 2 கதை?

கைதி 2 கதை?

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சீக்கிரமே தொடங்க உள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபலமான யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள கார்த்தி, தளபதி 67க்கு பின்னர் தான் கைதி 2 ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறியுள்ளார். ஆனால், கண்டிப்பாக அடுத்தாண்டு கைதி 2 ஷூட்டிங் ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், கதை இன்னும் ரெடியாகவில்லை, அதற்கான வேலைகளில் லோகேஷ் பிஸியாக இருப்பதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால், கைதி 2 கதை எப்படி இருக்கும் என தெரியாமல், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது லோகேஷ் யுனிவர்ஸில் இருக்குமா அல்லது வேறு கதையா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X