»   »  மொட்டை பாஸ் கார்த்தி.. இது காஷ்மோரா கலாட்டா பாஸ்!

மொட்டை பாஸ் கார்த்தி.. இது காஷ்மோரா கலாட்டா பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்பிற்காக நடிகர் கார்த்தி மொட்டை போட்டுக் கொண்டது தான் காஷ்மோரா படத்தின் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் காஷ்மோரா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் கவனம் பெற்ற கோகுலின் 2 வது படமிது.


Karthi Get Up Change for Kashmora

இடையில் சில பிரச்சினைகளால் இப்படம் பாதியில் நின்றது. இந்தப் படத்திற்குப் பின் கார்த்தி நடிக்க ஆரம்பித்த தோழா படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்து விட்டது.


இந்நிலையில் மீண்டும் காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.சுமார் 60 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் 'காஷ்மோரா', கார்த்தி நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தையும் சுமார் ஒன்றரை கோடி பொருட்செலவில் உருவான அரங்கில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.


இப்படத்தின் காட்சிகளை 15 அரங்குகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இப்படத்தில் சுமார் 4 கெட்டப்களில் கார்த்தி நடித்திருக்கிறார்.


அதில் ஒரு கெட்டப்பிற்காக கார்த்தி மொட்டை அடித்திருக்கிறார். இதனால் சமீபகாலமாக எந்த ஒரு விழாக்களில் கலந்து கொண்டாலும் தொப்பி அணிந்தே விழாவிற்கு வந்து செல்கிறார்.


சினிமாவிற்கு வந்த 10 வருடங்களில் மொட்டை அணிந்து கார்த்தி நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மொட்டை அடித்திருப்பதால் தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் வரை கலந்து கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறார்.


காஷ்மோரா படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் முடிக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.கொஞ்சம் வரலாறு + திகில்+ கற்பனை இந்த மூன்றின் கலவையாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthi Getup Change For Kashmora Movie, Now he has Shaved off his hair Completely.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil