Don't Miss!
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- News
42 லட்சம் பேர் இணைக்கவில்லை.. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விக்ரம் படத்தில் நடிக்காமல், வாய்ஸ் மட்டும் ஏன்?...கார்த்தி சொன்ன சூப்பர் தகவல்
சென்னை : தமிழ் சினிமாவில் மாசை தாண்டியும், ஜாலியான நடிகர் என ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. எந்த ரோல் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்யும் நடிகர்களில் இவரும் ஒருவர்.
தீரன் அதிகாரம் ஒன்று, கைதி படங்களுக்கு பிறகு கார்த்தி மீதான இமேஜ் மாறி உள்ளது. இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் ரிலீசிற்கு தயாராக உள்ளன. சமீபத்தில் ரிலீசான விருமன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசான விருமன் படம் கடந்த 9 நாட்களில் உலகம் முழுவதும் 48 கோடிகளை வசூல் செய்துள்ளது. 2022 ம் ஆண்டில் ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் விருமன் 8 வது இடத்தில் உள்ளது.
“சாப்பாட்டுக்கே
கஷ்டப்பட்ட
காலம்..
முதல்
வேலை,
முதல்
சம்பளம்”:
எஸ்ஜே
சூர்யாவின்
அந்தநாள்
நியாபகம்

விக்ரமில் வாய்ஸ் அப்பியரன்ஸ்
விருமன் படத்திற்கு முன், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கமலின் விக்ரம் படத்தில் வாய்ஸ் அப்பியரன்ஸ் மட்டும் கொடுத்திருந்தார் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் தில்லி ரோலில் தான் வாய்ஸ் கொடுத்தார் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2 படத்தின் ஆரம்பமாக இந்த சீன் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ரோலக்ஸ் - தில்லி மோதல் எப்படி இருக்கும்
ஆனால் விக்ரம் படத்தின் க்ளைமாக்சில் கார்த்தியின் சகோதரரான நடிகர் சூர்யா, ரோலக்ஸ் ரோலில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து, தற்போது வரை ரோலக்ஸ் கேரக்டரை கொண்டாடி வருகின்றனர். சூர்யா, ரோலக்சாக கெஸ்ட் ரோலில் நடித்த அந்த சீனில் கார்த்தியும் அதே போல நடித்திருந்தால் எப்படி இருக்கும். ஆனால் இவர் ஏன் நடிக்காமல், வாய்ஸ் மட்டும் கொடுத்தார் என ரசிகர்கள் தொடர்ந்து கெட்டு வருகின்றனர்.

கார்த்தி சொன்ன செம தகவல்
இந்நிலையில் சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் பேசிய கார்த்தி, விக்ரம் படத்தின் க்ளைமாக்சில் என்னுடைய தில்லி ரோல் தேவைப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் முடியாததால், வந்தியத்தேவன் ரோலுக்காக நீளமான முடியுடன் இருந்தேன். பொன்னியின் செல்வன் ஷுட்டிங் முடியாத நிலையில் தில்லி கேரக்டருக்காக தலைமுடியை வெட்ட முடியாது. அதனால் தான் ஆன்ஸ்கிரீன் அப்பியரன்ஸ் கொடுக்காமல், வாய்ஸ் மட்டும் கொடுத்தேன் என விளக்கம் அளித்தார்.

கைதி 2 அப்டேட் தந்த கார்த்தி
அதோடு லோகேஷ் கனகராஜுடன் 2023 ல் மீண்டும் கைதி 2 படத்தில் இணைய உள்ளதாகவும், விஜய்யின் தளபதி 67 ஷுட்டிங் முடிந்ததும் கைதி 2 வேலைகள் துவங்கப்படும் என்றும் கார்த்தி கன்ஃபார்ம் செய்தார். கைதி 2 படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் வரும் என ஏற்கனவே சொல்லப்படும் வருவதால் கைதி 2 படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த மாஸ் காத்திருக்கு
விருமன் படம் வெற்றி அடைந்த நிலையில் கார்த்தியின் அடுத்து எதிர்பார்க்கப்படும் படங்களான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ம் தேதியும், சர்தார் படம் தீபாவளிக்கும் ரிலீசாக உள்ளன.