மாஸ்டர் ஜேடியுடன் கபடி.. கைதி 2வில் அப்படியொரு காட்சி வருமா? கார்த்தியின் பதில் என்ன தெரியுமா?
சென்னை: விருமன் படம் வெற்றியடைந்த உற்சாகத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் உள்ளனர்.
விருமன் படத்தின் புரமோஷனுக்காக கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் பல ஊர்களுக்கு சென்றும், பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தும் வந்தனர்.
இந்நிலையில், இருவரும் இணைந்து பிரபல யூடியூப் சேனலில் குட்டி பருத்திவீரனுக்கு பதில் சொன்ன வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

விருமன் 4 நாள் வசூல்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண் மற்றும் சூரி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை விருமன் படம் வெளியானது. படம் வெளியான 4 நாட்களில் 36 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றிக் கொண்டாட்டம்
விருமன் படம் முதல் வாரத்தில் சிறப்பான வசூல் வேட்டையை நடத்திய நிலையில், படக்குழுவினருக்கு விநியோகஸ்தர்கள் பூங்கொத்துக்களை கொடுத்தும், மாலை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விருமன் படத்தின் புரமோஷனுக்காக கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் தனியார் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

மாஸ்டருடன் கபடி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஜேடி கதாபாத்திரத்தில் கபடி விளையாடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். கில்லி தீம் மியூசிக்கை போட்டே அனிருத் சம்பவம் செய்து இருப்பார். இந்நிலையில், கைதி 2 படத்தில் விஜய்யுடன் கபடி விளையாடும் காட்சி ஏதும் இருக்குமா என பருத்திவீரன் கெட்டப்பில் வந்த சிறுவன் கார்த்தியிடம் கேட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கார்த்தி என்ன சொன்னாரு தெரியுமா
கைதி படத்தில் கார்த்தி வைத்திருக்கும் கட்டப் பையில் ஜெயிலில் கபடி விளையாடி ஜெயிச்ச கோப்பைகள் இருக்கும். அது கைதி 2 படத்தில் தெரியவரும் என லோகேஷ் கனகராஜ் ரிவீல் செய்ததை வைத்து இப்படியெல்லாம் யோசிச்சிருக்கியான்னு வியந்த கார்த்தி, நீ லீடு கொடுத்துட்டுல்ல இதை வச்சி லோகேஷ் டெவலப் பண்ணி லோகி வெர்ஸை வேறலெவலுக்கு கொண்டு போயிடுவாருன்னு சிரித்துக் கொண்டே பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Recommended Video

கைதி 2
தளபதி 67 படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படம் உருவாகும் என சமீபத்தில் கார்த்தி ஓப்பனாகவே சொல்லி இருந்தார். தளபதி 67, கைதி 2 மற்றும் விக்ரம் 3 என அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் நடக்கப் போகும் மேஜிக்கை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











