கார்த்திக்கு சூர்யா கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்...என்னன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க

சென்னை : சூர்யா, கார்த்தி இருவருமே ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்துள்ள விருமன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது.

டைரக்டர் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரித்துள்ள விருமன் படம் உலகம் முழுவதும் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்துள்ளது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.

இதற்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ள கார்த்தியின் சர்தார் படம் தீபாவளி ரிலீசாக வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று போலீஸ் கேரக்டர்.

பிஸியான சூர்யா

பிஸியான சூர்யா

அதே சமயம் சூர்யாவும் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். தனது 42வது படமாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் திஷா பதானிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதோடு பாலாவுடன் வணங்கான், வெற்றிமாறனுடன் வாடிவாசல் என வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் சூர்யா.

எப்போ சேர்ந்து நடிப்பாங்க

எப்போ சேர்ந்து நடிப்பாங்க

இந்த சமயத்தில் சமீபத்திய பிளாக் பஸ்டர் படமான விக்ரமில் சூர்யா ரோலக்ஸ் ரோலில் நடிக்க, கார்த்தி வாய்ஸ் அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். இதனால் இவர்கள் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படும் கைதி 2 அல்லது விக்ரம் 3 படத்திற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

சூர்யா கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்

சூர்யா கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்

இந்நிலையில் விருமன் பட ப்ரொமோஷனுக்காக கேரளா சென்றிருந்த கார்த்தியிடம் பேட்டி ஒன்றில், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் நடித்ததற்காக கமல் சார், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். அது போல சூர்யா உங்களுக்கு கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட் ஏதாவது இருக்கா? என கேள்வி கேட்கப்பட்டது.

கார்த்தி சொன்ன சூப்பர் பதில்

கார்த்தி சொன்ன சூப்பர் பதில்

அதற்கு பதிலளித்த கார்த்தி, இப்போதும் படம் ஹிட் ஆனால் ஃபெராரி கார் கேட்டுள்ளேன். சிறு வயதில் இருந்தே பழைய ஜீப் வாங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால் எங்கெல்லாமோ தேடிப் பார்த்தும் ஒரிஜினல் மாடல் கிடைக்கவில்லை. ஆனால் என்னுடைய 40வது பிறந்தநாளன்று சர்ப்ரைசாக ஒரு ஜீப் வாங்கிக் கொடுத்தார். ஒரிஜினல் இன்ஜின். அது மறக்க முடியாதது எனறார்.

கார்த்தி கேட்ட கிஃப்ட் கிடைக்குமா?

கார்த்தி கேட்ட கிஃப்ட் கிடைக்குமா?

கார்த்தியின் இந்த ஜாலியான பேட்டி பலரையும் கவர்ந்து வருகிறது. விருமன் படம் வெற்றி அடைந்ததற்காக படத்தின் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வைர காப்பை பரிசாக வழங்கினார். அதை மேடையிலேயே அவருக்கே திருப்பிக் கொடுத்தார் சூர்யா. இந்நிலையில் விருமன் பட வெற்றிக்காக தயாரிப்பாளரான சூர்யா என்ன பரிசு வழங்க போகிறார்? கார்த்தி கேட்டபடி ஃபெராரி காரை சூர்யா வாங்கித் தருவாரா என அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X