டைரக்டர் அவதாரம் எடுக்கும் கார்த்தி...ஹீரோ யாரு தெரியுமா?

சென்னை : கோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவர். ரசிகர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய டாப் ஹீரோவாக வலம் வருகிறார் கார்த்தி.

கார்த்தி நடித்த அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து ரிலீசாக உள்ள கார்த்தியின் 3 படங்களும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் தான்.

டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதிதி ஷங்கர், ராஜ் கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இரண்டாவது முறையாக கூட்டணி

இரண்டாவது முறையாக கூட்டணி

விருமன் படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு ஹீரோ - தயாரிப்பாளர் என அண்ணன் - தம்பி இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் தான் விருமன்.

கார்த்தியின் நீண்ட நாள் கனவு

கார்த்தியின் நீண்ட நாள் கனவு

விருமனில் கிராமத்து கெட்அப், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன், சர்தார் படத்தில் போலீஸ் மற்றும் இரட்டை வேடம் என அசத்தி வரும் கார்த்தி அடுத்ததாக டைரக்டர் அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார்.ஹீரோக்கள் அனைவரும் மாஸ் ஹீரோ, வில்லன் என மாறிக் கொண்டிருக்கையில் கார்த்தி டைரக்டராக உள்ளார்.

எதிர்பாராமல் நடிகரான கார்த்தி

எதிர்பாராமல் நடிகரான கார்த்தி

கார்த்தி, இன்ஜினியரிங் படித்தவராக இருந்தாலும் நியூயார்க்கில் டைரக்ஷன் மற்றும் கிராஃபிக் டிசைனிங் கோர்சும் முடித்தவர். டைரக்டராக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவிற்கு வந்து, மணிரத்னத்திடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்து ஆயுத எழுத்து படத்தில் பணியாற்றினார் கார்த்தி. ஆயுத எழுத்து படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகராகவும் அறிமுகமானார்.

ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோ

ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோ

டைரக்டர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் எதிர்பாராத விதமாக ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது வாங்கி, ஹிட் ஆனதால் கார்த்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் வந்து, முழு நேர நடிகரானார். தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள், அதுவும் ரசிகர்களின் ஃபேவரைட்டான ஜாலியான ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.

கார்த்தி இவரை இயக்க போகிறாரா?

கார்த்தி இவரை இயக்க போகிறாரா?

இந்நிலையில் தற்போது தனது டைரக்டராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுவும் தனது அண்ணன் சூர்யாவை ஹீரோவாக வைத்து படம் எடுக்க உள்ளதாகவும், இந்த படம் ஒரு பயோபிக் படம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கான கதையை கூட தான் எழுதி விட்டதாகவும், டைட்டில் வைக்கும் அளவில் கதை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மட்டும் சொல்ல மாட்டேங்குறாரா

அந்த மட்டும் சொல்ல மாட்டேங்குறாரா

ஆனால் இது யாருடைய பயோபிக் என்பதை சொல்ல கார்த்தி மறுத்து விட்டார். மீண்டும் இந்த கதையை ரீஒர்க் கூட செய்யலாம் என தெரிவித்துள்ளார். இதனால் கார்த்தி - சூர்யா காம்போ மீண்டும் இணைவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. கைதி 2 படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வரும் நிலையில் கார்த்தியின் எதிர்பாராத இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

எப்போ இந்த படம் ஆரம்பம்

எப்போ இந்த படம் ஆரம்பம்

கார்த்தி படங்களை சூர்யா தயாரித்து வந்தார். தற்போது கார்த்தி, சூர்யாவையே இயக்க போகிறார் என்னும் போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது. விரைவில் தனது டைரக்டர் கனவை கார்த்தி நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் கார்த்தி, சூர்யா இருவரும் பல படங்களில் கமிட்டாகி உள்ளதால் தற்போது உடனடியாக கார்த்தி - சூர்யா இணையும் படம் உருவாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X