»   »  மணிரத்னமுமா?: கார்த்தி சொல்லி தான் உண்மை தெரிகிறது

மணிரத்னமுமா?: கார்த்தி சொல்லி தான் உண்மை தெரிகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் சார் தனது உதவியாளர்களிடம் நடந்து கொள்வது போன்று இல்லாமல் நடிகர்களிடம் ரொம்ப ஸ்வீட்டாக இருப்பார் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்திடம் துணை இயக்குனராக வேலை செய்த கார்த்தி தற்போது அவரது இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வருகிறார்.

இந்நிலையில் படம் குறித்து கார்த்தி கூறுகையில்,

பைலட்

பைலட்

போர் விமானங்களை இயக்கும் விமானி கதாபாத்திரத்திற்காக விமானப் படை அதிகாரிகளை சந்தித்து பேசினேன். விமானப் படையில் இருக்கும் என் நண்பர் மூலம் அதே துறையில் உள்ள சிலரை சந்திக்க முடிந்தது. மணி சார் மூலம் ஒரு விமானப்படை அதிகாரியின் தொடர்பு கிடைத்தது.

அதிதி ராவ் ஹைதரி

அதிதி ராவ் ஹைதரி

அதிதி ரொம்ப சின்சியர். தமிழே தெரியாதவராக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் அவர் டாக்டராக வருகிறார். இதற்காக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனைக்கு சென்று கண்காணித்துள்ளார்.

மனைவி

மனைவி

தனது கணவர் காதல் கதையில் நடிப்பது எந்த மனைவிக்கும் பிடிக்காது. தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ரொமான்ஸ் செய்வதை அவர்களால் பார்க்க முடியாது. ஆக்ஷன் படங்களில் நடித்தால் அவர்களுக்கு பிடிக்கும்.

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம் சாரிடம் உதவியாளராக இருந்துவிட்டு அவர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். முதலில் தயக்கமாக இருந்தது. அதன் பிறகு சவுகரியமாகிவிட்டது. உதவியாளர்களிடம் நடந்து கொள்வது போன்று இல்லாமல் மணி சார் நடிகர்களிடம் ரொம்ப ஸ்வீட்டாக இருப்பார் என்றார் கார்த்தி.

English summary
Karthi said that director Maniratnam is very sweet with his actors but not the same with his assistants.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil