என்னங்க சொல்றீங்க... கார்த்தி 6 வருஷமா ஷேவ் பண்ணவே இல்லையா?

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் கார்த்தியின் 3 படங்களில் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாக உள்ளது. இந்த 3 படங்ளுமே ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படங்கள்.

முத்தையா இயக்கி உள்ள விருமன் ஆகஸ்ட் 11 ம் தேதியும், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ம் தேதியும், பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ள சர்தார் அக்டோபர் மாதம் 24 ம் தேதி தீபாவளிக்கும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கார்த்தி, தனது இன்ஸ்ட்கிராம் படத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை பகிர்ந்து, ஆச்சரியப்படும் தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதை கேட்ட பலரும் ஷாக்காகி உள்ளனர். ஆனாலும் கார்த்தியின் இந்த புதிய லுக் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

முதல் படத்திலேயே அப்படி தான்

முதல் படத்திலேயே அப்படி தான்

பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, முதல் படத்திலேயே பரட்டை தலை, தாடி என பக்கா கிராமத்#து ரெளடி கெட்அப்பில் கலக்கி இருந்தார். அந்த லுக்கில் கார்த்தியை பார்த்த பலரும், அவர் அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்ஸ் படித்தவர் என அடித்துச் சொன்னாலும் நம்பவில்லை. அப்படி இருந்தது கார்த்தியின் லுக்.

கடைசியா எப்போ பார்த்தோம்

கடைசியா எப்போ பார்த்தோம்

அதைத் தொடர்ந்து பல படங்களிலும் பல விதமான ஸ்டைல்களில் நடித்தார் கார்த்தி. ஆனாலும் இவரை தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து கடைசியாக எப்போ பார்த்தீர்கள் என ஞாபகம் இருக்கா? லேட்டஸ்டாக கார்த்தி நடித்த கைதி, சுல்தான், தம்பி போன்ற படங்களை வரிசையாக பார்த்தால் நீண்ட தலைமுடி, தாடி, வித்தியாசமான மீசை என்று தான் இருப்பார். தற்போது பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் ரோலில் நடிப்பதற்கும், விருமன், சர்தார் படங்களிலும் அப்படித்தான் உள்ளார்.

என்னது 6 வருஷமாச்சா

என்னது 6 வருஷமாச்சா

ஆனால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளீன் ஷேவ் பண்ணிய போட்டோவை பகிர்ந்துள்ளார் கார்த்தி. இது கார்த்தி தானா? ஒருவேளை பழைய போட்டோவா இருக்குமோ என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த போட்டோ உள்ளது. இந்த போட்டோவுடன், பயப்பட வைத்த கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து விட்டேன். ஒருமுறை நீங்கள் இதை செய்து விட்டால், இது ஒன்றும் தவறில்லை. 6 வருடங்களுக்கு பிறகு ஷேவ் செய்திருக்கிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

இதுவும் நல்லா தான் இருக்கு

இதுவும் நல்லா தான் இருக்கு

சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவிற்கு கூட முறுக்கு மீசையுடன் தான் கார்த்தி வந்திருந்தார்.கார்த்தியின் இந்த புதிய லுக்கிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவிக்கிறார்கள். ஆனால் இது புதிய படத்திற்கான லுக்கா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.

 நம்பவே முடியல

நம்பவே முடியல

கார்த்தியின் புதிய லுக்கை விட அவரின் கேப்ஷன் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கார்த்தி 6 வருடங்களாக ஷேவ் பண்ணாமலேவா இருந்தார். நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X