twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்த்தியின் கொம்பனுக்கும் கிளம்பியது எதிர்ப்பு: தடை விதிக்கக் கோரி மனு

    By Siva
    |

    சென்னை: கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்சார் போர்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொம்பன். கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்சார் போர்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி. செல்வ குமார் கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், ஆப்பநாட்டு கொம்பன் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிக்கப்பட்டு வருவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

    கார்த்தி

    கார்த்தி

    இந்த படத்தில் கலவரத்துக்கு முதுகுளத்தூர் பகுதியை கதைக்களமாகக் கொண்டு அதில் கதாநாயகன் ஆதிக்கவாசி போல் சித்தரிக்கப்பட்டுள்ளதும், அதனால் கொம்பன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    அச்சம்

    அச்சம்

    இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பின்னணியில் உருவாகிவருவதால் அதனால் அந்த பகுதியில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த திரைப்படம் தொடர்பாக நாடார் சமூக அமைப்பும் சென்சார் போர்ட்டில் மனு கொடுத்துள்ளது.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த படம் வெளிவரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்படலாம். எனவே, இந்த படத்தை வெளியிட அனுமதி வழங்கக்கூடாது என்று செல்வ குமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Karthi's Komban is in trouble as a petition has been filed in censor board seeking it to ban the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X