ஆர்யாவுக்கு பதிலாக கார்த்தி?: 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் சூது கவ்வும் இயக்குநர்

சென்னை: கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத் தேவனாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்யாவுக்கு பதில் கார்த்தி

ஆர்யாவுக்கு பதில் கார்த்தி

கார்த்தியின் விருமன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக அவர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ளது, ரசிகர்களிடம் ரொம்பவே எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்தார், ஜப்பான் ஆகிய படங்கள் கார்த்தியின் நடிப்பில் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆர்யா நடிக்கவிருந்த படத்தில், அவருக்குப் பதிலாக தற்போது கார்த்தி கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தியை இயக்கும் நலன் குமாரசாமி

கார்த்தியை இயக்கும் நலன் குமாரசாமி

விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என சிறப்பான படங்களைக் கொடுத்த நலன் குமாரசாமி, கார்த்தியின் படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டாக அமைந்த சூது கவ்வும் படத்தைப் பார்த்த கமல்ஹாசன், நலன் குமாரசாமியை அழைத்து பாராட்டியதோடு, ஒரு படம் இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். ஆனால், அது ப்ரேக் அப் ஆனது. அதன்பிறகு தான் காதலும் கடந்து போகும் படத்தை இயக்கினார் நலன்.

கூட்டணியில் இருந்து விலகிய ஆர்யா

கூட்டணியில் இருந்து விலகிய ஆர்யா

விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியான 'காதலும் கடந்து போகும்' கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனையடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் நலன் குமராசாமி. இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது ஆர்யா இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்தே இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு பதிலாக கார்த்தி கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்தான தயாரிப்பாளரின் படத்தில் கார்த்தி

ஆஸ்தான தயாரிப்பாளரின் படத்தில் கார்த்தி

நலன் குமரசாமி இயக்கும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பதால், கார்த்தி உடனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ஆஸ்தான தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்தி இணையவுள்ளார். பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக, சூர்யா அவரது 42வது படத்திலும், கார்த்தி நலன் குமாரசாமி இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா 42 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட்டதால், அடுத்து கார்த்தி - நலன் குமாரசாமி படம் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தத் தகவல் உறுதியானால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு நலன் குமாரசாமி படம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X