பாக்ஸ் ஆபிஸில் ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி… அமர்க்களப்படுத்திய சர்தார்… இந்தாண்டில் 2வது சதம்…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் 21ம் தேதி பிரின்ஸ், சர்தார் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை விட, கார்த்தியின் சர்தாருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்தார், திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டே வாரத்தில் சூப்பரான சாதனையை படைத்துள்ளது.

2022 தீபாவளி ரிலீஸ்

2022 தீபாவளி ரிலீஸ்

இந்தாண்டு தீபாவளி வெளியீடாக கார்த்தியின் சர்தார் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்தப் படங்களில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், இரண்டாவது நாளில் இருந்து ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. கார்த்தியின் சர்தாருக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனத்தால், அந்தப் படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

இயக்குநருக்கு கார் பரிசு

இயக்குநருக்கு கார் பரிசு

சர்தார் திரைப்படம் முதல் வாரம் தமிழ்நாட்டில் மொத்தமே 380 திரைகளில் மட்டுமே திரையிடப்பட்டது. ஆனால், முதல் வாரம் 380 திரைகளில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த சர்தார், அடுத்த வாரத்தில் இருந்து கூடுதலாக 120 திரைகளில் திரையிடப்பட்டது. அதனால், இரண்டாவது வாரத்தில் மொத்தம் 500 திரைகளில் சர்தார் வெளியானது. அதன் காரணமாக முதல் பத்து நாட்களில் 75 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் உற்சாகமான கார்த்தி இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு Toyota Fortuner காரை பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

100 கோடி வசூல்

100 கோடி வசூல்

இந்நிலையில், சர்தார் படம் 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தாண்டில் விருமன், பொன்னியின் செல்வன் என வரிசையாக ஹிட் கொடுத்த கார்த்தி, சர்தார் படம் மூலம் ஹாட்ரிக் சிக்சர் அடித்துள்ளார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை வீழ்த்தி, கார்த்தியின் சர்தார் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், கார்த்தியின் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரித்துள்ளது. கார்த்தி அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சாதித்த சர்தார் கூட்டணி

சாதித்த சர்தார் கூட்டணி

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில், கார்த்தியுடன் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கார்த்தி ரா அதிகாரியாகவும் போலீஸாகவும் நடித்துள்ளார். தண்ணீர் அரசியலை பின்னணியாக வைத்து ஆக்‌ஷன் ஜானர் படமாக சர்தார் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X