ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இப்படியா…? கார்த்தியின் சர்தார் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

சென்னை: கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து சர்தாரும் கார்த்தியின் கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டிய சர்தார், ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகிறது.

கார்த்தியின் சர்தார் தீபாவளி

கார்த்தியின் சர்தார் தீபாவளி

கார்த்தியின் கேரியரில் இந்தாண்டு ரொம்பவே முக்கியமானதாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து மாஸ் காட்டிய கார்த்தி, சர்தார் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார். முக்கியமாக இந்தாண்டு தீபாவளியை ரசிகர்கள் கார்த்தியின் சர்தார் படத்துடன் கொண்டாடினர். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் தீபாவளிக்கு ரிலீஸான நிலையில், சர்தாருக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனத்தால் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகமொத்தம் இந்தாண்டு கார்த்தியின் சர்தார் தீபாவளி என சொல்லலாம்.

100 கோடி - கார் பரிசு

100 கோடி - கார் பரிசு

சர்தார் முதல் வாரம் தமிழ்நாட்டில் 380 திரைகளில் மட்டும் திரையிடப்பட்டது. ஆனால், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் அடுத்த வாரத்தில் இருந்து கூடுதலாக 120 திரைகள் ஒதுக்கப்பட்டன. மேலும், மூன்று வாரங்கள் முடியும் முன்னரே 100 கோடி வசூலித்து தீபாவளி ரேஸில் சர்தார் சதம் அடித்தது. இதனால், உற்சாகமான கார்த்தி இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு Toyota Fortuner கார் பரிசாக கொடுத்து சந்தோஷப்படுத்தினார். இந்தாண்டில் விருமன், பொன்னியின் செல்வன் என வரிசையாக ஹிட் கொடுத்த கார்த்தி, சர்தார் படம் மூலம் ஹாட்ரிக் சிக்சர் அடித்துள்ளார்.

சர்தார் ஓடிடி ரிலீஸ்

சர்தார் ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 18ம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறதாம். கடந்த மாதம் 21ம் தேதி வெளியான சர்தார், ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஓடிடியிலும் ரிலீஸாவது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்க ரசிகர்களிடம் இன்னும் வரவேற்பு குறையாத நிலையில், ஏன் இந்த அவசரம் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதேநேரம், சர்தார் ஆஹா தளத்தில் வெளியாவதால், ஓடிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜப்பான் படத்துக்கு எதிர்பார்ப்பு

ஜப்பான் படத்துக்கு எதிர்பார்ப்பு

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள சர்தார் படத்தில், கார்த்தியுடன் லைலா, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கார்த்தி ரா அதிகாரியாகவும் போலீஸாகவும் நடித்துள்ளார். தண்ணீர் அரசியலை பின்னணியாக வைத்து ஆக்‌ஷன் ஜானர் படமாக சர்தார் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சர்தார் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X