“சர்தாரை அவ்வளவு ஈஸியா பிடிக்க முடியாது“..பல கெட்டப்பில் மிரட்டும் கார்த்தி..சர்தார் டிரைலர் ரிலீஸ்!

சென்னை : நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்தி நடிகர் சங்கி பாண்டே, ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்தார் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ந் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் உருவான விருமன் திரைப்படம் நல்லவிமர்சனத்தை பெற்றது. அதுமட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் கவரும் வகையில் இருந்ததால் அனைவரும் அவரின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

சர்தார் 21ந் தேதி ரிலீஸ்

சர்தார் 21ந் தேதி ரிலீஸ்

நடிகர் கார்த்தி தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்தார் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி. பிரகாஷ் இசையில் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சர்தார் படம் அக்டோபர் மாதம் 21ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையங்கில வெளியாக உள்ளது.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

இந்நிலையில், சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதில், கார்த்தி போலீஸ் மற்றும் உளவாளி என இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்து உள்ளார். போலீஸ் கேரக்டருக்கு ஜோடியாக ராஷிகண்ணாவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு ரஜிஷா விஜயனும் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளனர். சர்தாரை அவ்வளவு ஈஸியா பிடிக்க முடியாது என்று டிரைலர் தொடங்குகிறது.

ரகசிய பைஃலை தேடும் கார்த்தி

ரகசிய பைஃலை தேடும் கார்த்தி

ராஜாஜி மாளிகையிலிருந்து காணாமல் போன பைஃலை காணும், அதில் ராணுவ ரகசியம் எல்லாம் இருக்கு. சிபிஐ, ராணுவம்னு அனைவரும் அந்த பைஃலை தேடி அலைச்சிட்டு இருக்காங்க, அவங்களுக்கு முன்னாடி நீ புடிச்சிட்டா.. நீதான் நேஷனல் டிரெண்டிங்..என பெரிய ட்விஸ்டுடன் டிரைலர் முடிவடைகிறது. இந்த பைஃயில் கார்த்தி செல்வது தான் கதையா இருக்கும் என்று டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.

More from Filmibeat

Read more about: sardar trailer karthi raashi khanna
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X