இறுதிக்கட்ட பணிகளில் வேகமெடுக்கும் சர்தார்: கார்த்தி ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்

சென்னை: கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள 'சர்தார்' படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது.

வந்தியத்தேவனுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு

வந்தியத்தேவனுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு

கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விருமன்' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திக்கு 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் கேரக்டரில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் என பலரும் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பது, அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி வெளியாகிறது.

மீண்டும் போலீஸ் ஆபிஸர் ரோலில் கார்த்தி

மீண்டும் போலீஸ் ஆபிஸர் ரோலில் கார்த்தி

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து கார்த்தியின் சர்தார் திரையரங்குகளில் வெளியாகிறது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சிறுத்தை, தீரன் அதிகாரம் படங்களுக்குப் பின்னர் கார்த்தி இதில் போலீஸ் ஆபிஸராக கலக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இன்னொரு கேரக்டரில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர்

விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர்

சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால், அடுத்தடுத்து படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள சர்தார் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேகமெடுக்கும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ்

வேகமெடுக்கும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ்

இந்நிலையில், சர்தார் படத்தில் இருந்து மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், சர்தார் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். இதனால், சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசரைத் தொடர்ந்து ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து கார்த்தியின் படங்கள் வெளியாவது, அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X