கார்த்தியின் சர்தாருடன் மோதும் சிவகார்த்திகேயனின் எஸ்கே 20...எப்போ தெரியுமா?
சென்னை : கார்த்தியின் சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாம். இதனால் பாக்ஸ் ஆபீசில் யாருடைய படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்க துவங்கி விட்டது.
விஜய்யின் பீஸ்ட் மற்றும் யாஷின் கேஜிஎஃப் 2 படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாவது தான் தற்போது திரையுலகமே அதிகம் எதிர்பார்க்கும் விஷயமாக உள்ளது. இதே எதிர்பார்ப்பு தற்போது கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களுக்கும் எழுந்துள்ளது.

கார்த்தியின் சர்தார்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்தார். கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், மீண்டும் போலீஸ் ரோலில் நடித்துள்ளார். இந்த ஆண்டில் வெளிவர உள்ள மற்றொரு பெரிய படமாக இது உள்ளது. நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

தெலுங்கில் எஸ்கே 20
இதே போல் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டைரக்டர் அனுதீப் இயக்கும் புதிய படத்திற்கு எஸ்கே 20 என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் தான் தெலுங்கில் வெளிவர உள்ள சிவகார்த்திகேயனின் முதல் படமாகும். காமெடி ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மரியா ரோபோஷாப்கா, சத்யராஜ், நவீன் போலிஷெட்டி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் இந்த இரு படங்களும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இந்த இரு படங்களும் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீசாக உள்ளதாம். ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் பாக்ஸ் ஆபீசில் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

அடுத்து இவங்க தானா
ரஜினி-கமல், விஜய்-அஜித் வரிசையில் தற்போது கார்த்தி - சிவகார்த்திகேயன் இணைய போகிறார்களா என்ற எதிர்பார்ப்பும் கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது. கார்த்தி ஏற்கனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், விருமன் என வரிசையாக பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சிவகார்த்திகேயனும் பல படங்களில் நடித்து வந்தாலும் ரஜினியின் தலைவர் 169 படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சமயத்தில் ஒரே நாளில் இருவரின் படங்களும் ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











