சர்தார் பாக்ஸ் ஆஃபிஸ் இரண்டாம் நாள்: தீபாவளி ரேஸில் கெத்து காட்டும் கார்த்தி!

சென்னை: கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் (அக் 21) திரையரங்குகளில் வெளியானது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இதனால் முதல் நாளில் பெரிய ஓப்பனிங் கிடைக்காத சர்தார், இரண்டாம் நாளில் இருந்து வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

கார்த்தியின் சர்தார்

கார்த்தியின் சர்தார்

இந்தாண்டு விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்தி, மூன்றாவதாக சர்தார் படத்தையும் தீபாவளிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே சர்தார் கார்த்திக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், அவரது ரகசிய உளவாளி கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கார்த்தியுடன் ரஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் மோதிய கார்த்தியின் சர்தாருக்கு முதல் நாளில் பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இதனால், சர்தார் முதல் நாளில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்தது. ஆனால், முதல் நாளிலேயே சர்தார் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கத் தொடங்கியதால், ரசிகர்களின் பார்வை அந்தப் பக்கமாக திரும்பியது. அதேநேரம், பிரின்ஸ் படத்தின் நெகட்டிவான விமர்சனங்களும் சர்தாருக்கு பலமாக அமைந்துவிட்டது. இதனால், இரண்டாம் நாளில் இருந்து சர்தார் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

இரண்டாம் நாள் கலெக்‌ஷன்

இரண்டாம் நாள் கலெக்‌ஷன்

முதல் நாளில் 4 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூலித்த சர்தார், இரண்டாம் நாளில் இருந்து சூடு பிடிக்கத் தொடங்கியது. இதனால், இரண்டாம் நாளில் 5 முதல் 6 கோடி வரை வசூலித்து, தீபாவளி ரேஸில் முதலிடத்திற்கு வந்துவிட்டது. முதல் நாளை விடவும் கூடுதலாக 2 கோடி வரை கலெக்‌ஷன் கிடைத்துள்ளது, சர்தார் படக்குழுவுக்கு தீபாவளி ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும், முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 10 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் சர்தாருக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம்.

இன்னும் எதிர்பார்க்கலாம்

இன்னும் எதிர்பார்க்கலாம்

2019 தீபாவளி ரேஸில் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்துடன் கார்த்தியின் 'கைதி' மோதியது. அப்போதும் முதல் நாளில் பெரிய ஓப்பனிங் கிடைக்காத கைதிக்கு, அடுத்தடுத்த நாட்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், இந்த முறையும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்ஸை வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளது கார்த்தியின் சர்தார். பிரின்ஸ் படத்துடன் ஒப்பிடும் போது சர்தாரின் வசூல் இரண்டாம் நாளில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் தீபாவளி விடுமுறை இருப்பதால், சர்தார் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 45 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள சர்தார், ஏற்கனவே ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X