Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சுல்தான் விரைவில் திரைக்கு வரும்.. மாஸானஅப்டேட்டை வெளியிட்டார் தயாரிப்பாளர்!
சென்னை : கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து வரும் சுல்தான் திரைப்படத்தின் சூப்பரான அப்டேட்டை வெளியிட்டார் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு.
Recommended Video
கைதி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்தி நடித்து வரும் சுல்தான் திரைப்படம் ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி தற்பொழுது மணிரத்னம் இயக்கி வரும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் நடித்து வரும் நிலையில், சுல்தான் திரைப்படத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களையும் கவர்ந்ததோடு
சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவான ரெமோ திரைப்படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்ததோடு, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கூட்டத்தை மேலும் அதிகரித்தது. முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தி இருந்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.

செய்திகள் வலம் வந்தன
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இவரின் அடுத்த திரைப்படம் எந்த மாதிரியாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற திரைப்படத்தை இயக்கி வருவதாக செய்திகள் வலம் வந்தன.

தமிழில் அறிமுகம்
மேலும் இந்த திரைப்படத்தில் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், தென்னிந்தியாவின் க்யூட் குயினாக கொண்டாடப்பட்டு வரும் ரஷ்மிகா மந்தனா முதல்முறையாக சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்களையும் கொண்டுள்ள சுல்தான் திரைப்படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்களும், இந்த திரைப்படம் எந்த மாதிரி கதைக்களத்தை கொண்டது என்ற எந்த ஒரு செய்திகளும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர்ஸ் எஸ்ஆர் பிரபு தற்பொழுது மாஸான அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

கொசுரு வேலைகள்
சுல்தான் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் வழங்கிய எஸ்ஆர் பிரபு நேற்று தனது முகப்புத்தகத்தில் சுல்தான் திரைப்படத்தின் 90% படப்பிடிப்புகள் மற்றும் முக்கியமான படத்தொகுப்பு வேலைகள் முற்றிலும் முடிவு பெற்று விட்டதாகவும். இன்னும் கொசுரு வேலைகள் மட்டுமே இருக்கின்றது அதையும் இந்த கொரானா லாக் டவுன் முடிவதற்குள்ளாகவே முடிந்துவிடும்.

கம்ப்ளீட் என்டர்டைன்மென்ட்
மேலும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த படங்களிலேயே சுல்தான் திரைப்படம் தான் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும், இது ஒரு கம்ப்ளீட் என்டர்டைன்மென்ட் திரைப்படம் எனவும் கூறியுள்ள தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சுல்தான் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எனினும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியவாறு கடைசியில் "ஜெய் சுல்தான்" என அந்தப் பதிவை முடித்துள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி
இவ்வாறு இதுவரை சுல்தான் திரைப்படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இத்தனை மாதங்களாக வெளிவராத நிலையில் தற்பொழுது எஸ்ஆர் பிரபு வெளியிட்டுள்ள இந்த மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.