கார்த்தியின் விருமன் ஆடியோ விழா எப்போது?...புதிய தகவலால் உற்சாகமான ரசிகர்கள்
சென்னை : கார்த்தி அடுத்தடுத்த படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
தற்போது கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தைய்யா இயக்கிய விருமன் படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது.
டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி பக்கா கிராமத்து கெட்அப்பில் நடித்துள்ள படம்.

விருமன் முன்கூட்டியே ரிலீசா?
விருமன் படம் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.பிறகு விக்ரமின் கோப்ரா பட அதே தேதியில் தள்ளி வைக்கப்பட்டதாக சொல்லப்படுவதால் விருமன் படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போதைய தகவலின் படி ஆகஸ்ட் 11 ம் தேதி விருமன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விருமன் ஆடியோ விழா எப்போ
இந்நிலையில் விருமன் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3 ம் தேதி மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த விருமன் டீமும் விரைவில் மதுரை புறப்பட்டுச் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையைமத்துள்ளார்.

இது தான் படத்தின் கதையா
விருமன் படம் தந்தை - மகன் இடையேயான உறவை சொல்லும் கதை என சொல்லப்படுகிறது. விருமன் படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட படங்களில் படமாக்கப்பட்டது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு மதுரை பேக்கிரவுண்டில் கார்த்தி நடித்துள்ள படம் இது.

அடுத்தடுத்த படங்கள் ரெடி
சமீபத்தில் தான் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட நிகழ்வான விருமன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் விருமன் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய தகவல் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஏதுவுமே சொல்லலியே
இதனால் விருமன் ஆடியோ விழா மதுரையில் தான் நடக்கிறதா, ஆகஸ்ட் 3 ம் தேதி நடக்கிறதா என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இன்று அல்லது நாளை இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











