கார்த்தியின் அடுத்த அதிரடி..விருமன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்!

சென்னை : சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தந்தை மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள விருமன் படத்தில், அதிதி சங்கர், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.

விருமன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

விருமன்

விருமன்

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதிதி சினிமாவில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

குடும்ப உறவை சொல்லும் படம்

குடும்ப உறவை சொல்லும் படம்

கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார பெண்ணாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது.

ஆடியோ ரிலீஸ்

ஆடியோ ரிலீஸ்

விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தநிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவை அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விக்ரமின் கோப்ரா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளால் தாமதமானதால், கோப்ரா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11ந் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மாற்றப்படலாம் எனத் தகவல்கள் கசிந்தன. இதனால் விருமன் படத்தை முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 12ந் தேதியே திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X