“விஜய்யுடன் தளபதி 67-ல நடிக்க ஆசைதான்… ஆனால் அதில் கொஞ்சம்…? ட்விஸ்ட் வைத்த கார்த்தி

சென்னை: கார்த்தியின் கேரியரில் இந்த ஆண்டு மிக முக்கியமானதாக திரை விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து கார்த்தியின் படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் ராஜூ முருகன், லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் படங்களில் கார்த்தி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தகது.

சர்தார் சாதனை

சர்தார் சாதனை

அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, பையா, மெட்ராஸ், கைதி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இந்த ஆண்டில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களும் கார்த்திக்கு சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளன. சர்தார் திரைப்படம் வெளியான 5 தினங்களில் 50 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால், அவாது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விரைவில் ராஜூ முருகன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்த வாரம் அறிவிப்பு

அடுத்த வாரம் அறிவிப்பு

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்திற்கு 'ஜப்பான்' என்ற டைட்டில் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சர்தார் படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசிய கார்த்தி, தனது அடுத்த படம் குறித்த அப்டேட் அடுத்த வாரம் வெளியாகும் எனக் கூறியுள்ளார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி இரண்டாம் பாகத்தில் கார்த்தி கமிட் ஆகியுள்ளார். 2019ல் வெளியான கைதி சூப்பர் ஹிட் அடித்தது. கார்த்தி சோலோவாக ஆக்சன் ட்ரீட் கொடுத்து மிரட்டியிருந்தார். இந்நிலையில், கைதி 2 சூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என தெரிகிறது.

தளபதி 67-ல் கார்த்தி

தளபதி 67-ல் கார்த்தி

இதனிடையே சர்தார் சக்ஸஸ் மீட்டில் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள கார்த்தி, "தளபதி 67' படத்தில் நடிப்பது குறித்து எதுவும் தெரியவில்லை. அதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தளபதி 67, கைதி 2 இரண்டு படங்களுக்கான தயாரிப்பாளர்கள் வேறு வேறு. அவர்கள் இருவரிடமும் அனுமதி வாங்கி தளபதி 67ல் நடிக்க முடியுமா என தெரியவில்லை. நான் ஆசைப்பட்டாலும் தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்" எனக் கூற்யுள்ளார். இதன்மூலம் இப்போதைக்கு தளபதி 67ல் கமிட் ஆகவிலை என்றாலும், அதில் நடிக்க விருப்பம் இருப்பதாகக் கூறியுள்ளார் கார்த்தி.

கைதி 2 அடுத்த ஆண்டு

கைதி 2 அடுத்த ஆண்டு

சில தினங்களுக்கு முன்னர் தனியார் சேனலுக்கு பேட்டியளித்திருந்த கார்த்தி, தளபதி 67க்கு பின்னர் தான் கைதி 2 ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறியிருந்தார். ஆனால், கண்டிப்பாக அடுத்தாண்டு கைதி 2 ஷூட்டிங் ஆரம்பிக்கும் எனவும், கதை இன்னும் ரெடியாகவில்லை, அதற்கான வேலைகளில் லோகேஷ் பிஸியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனிடையே தற்போது தளபதி 67 படம் குறித்தும் கார்த்தி பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X